கடந்த பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த ஒன்றிய அரசு பணிகள் சுமார் எட்டு லட்சம் என நாடாளு மன்றத்தில் அறிவித்த நிலையில், தற்போது அதில் 75,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய வேலைவாய்ப்பு வழங்கியதைப் போல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக பிரதமர் மோடியின் உருவப்படத்தை வைத்து அவரது அருகே நின்று பணி நியமன ஆணை பெறுவது போல சில ஊர்களில் படங்கள் வெளியாகி யுள்ளது. இதைத் தான் தேர்தல் கால கேலிக்கூத்து என கிண்டல் செய்துள்ளது காங்கிரஸ்.
எது எப்படியோ, வேலை கிடைத்தால் சரி என பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்கள் மீதம் உள்ள 7.5 லட்சம் நிரப்பப்படாத அரசு பணியிடங்களுக்கு எப்போது விடிவு வரும் என்ற கேள்விக்குறியோடு உள்ளார்கள்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment