டாக்டர் நாயர் போன்ற பெரியார் ஏன் ‘பாவி’யாக்கப்பட்டார்? நான் ஏன் பாவி யாக்கப்பட்டிருக்கிறேன்? முன்பெல்லாம் டாக்டர் நாயர் வெளியே செல்லுகிறார் என்றால் அவரோடு ஒரு துப்பறியும் சப்-இன்ஸ்பெக்டரும் மாறு உடையில் உடன் செல்வாராம். அதுசமயம் நான் ஓர் இளை ஞன். ஒருசமயம் ஏதோ ஒரு பொது அலு வலாக அவர் ஈரோட்டுக்கு வந்திருந்தார். அவருடைய சாமான்களை எல்லாம் இர யிலடியிலேயே விட்டுவிட்டு வந்திருந்தார். அவருடைய நண்பர் ஒருவர், ‘யாருடைய பாதுகாப்பில் சாமான்கள் விடப்பட்டிருக் கின்றன?’ என்று கேட்கவும் தனக்குக் காவ லாக ஓர் இரகசிய போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுப்பப்பட்டிருப்பதாகவும், வேறு நபர் தன்னுடன் இல்லாமையால் அவரிடமே தன் சாமான்களை ஒப்புவித்துவிட்டு வந்த தாகவும் தெரிவித்தார். ஓர் இரகசிய போலீஸ் அதிகாரி பின்பற்றும் அளவுக்கு தேசியவாதியாய் இருந்த அவர்தான் - பிறகு ‘தேசத் துரோகி’யாக்கப்பட்டார். ஆரம் பத்தில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு விரோதமாக தேசியப் போர்வையில் பார்ப்பனர்களை ஆதரித்தவர்தான் அவர். நானும் ஆரம்பத் தில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாயிருந்து பார்ப்பனரல்லாதார் தேர்தலை எதிர்த்த வன்தான். பிறகுதான் உண்மை உணர்ந்து நாங்கள் பார்ப்பனரல்லாதாரோடு ஒன்றானோம்.
ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களில் மிக முக்கியமானவரான சர்.பி. தியாகராயச் செட்டியார் கூட ஆரம்பத்தில் தேசியவாதி யாக இருந்தவர்தான். 1914இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் காரிய தரிசியாயிருந்து அரும்பெரும் தொண்டாற் றியவர்தான் அவர். பிறகுதான் அவரும் இன உணர்ச்சி பெற்றார். ஆகவே, நாங் களெல்லாம் துவக்கத்திலேயே இராட்சதர் களாக ஆக்கப்பட்டவர்கள் அல்லர். அடி மைகளாயிருந்து பிறகு அவர்களின் கொடுமை தாங்கமுடியாமல், இழிவு பற்றிய உணர்ச்சிபெற்று விழிப்படைந்தவர்கள் தாம் நாங்கள். அப்படி மான விழிப்புணர்ச்சி பெற்ற பிறகு தான் நாங்கள் ‘இராட்சதர் களா’க்கப்பட்டோம்.
பிறகுதான் அவர்கள் எங்களை விட்டு விட்டு வேறு விபீஷணர்களைப் பிடிக்க ஆரம்பித்தார்கள். உத்தியோகத்தில் நம் இனத்தவருக்கு உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான், காங்கிரஸ் ஸ்தாபனம் வேறுபக்கம் பார்க்க ஆரம்பித்தது. அதுவரை அது வெறும் உத்தியோகக் கோரிக்கை ஸ்தாபனமாகத் தான் இருந்து வந்தது.
காங்கிரசின் ஆரம்பகால சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இதன் உண்மை விளங் கும். அப்போதெல்லாம் காங்கிரஸ் மாநாடு களில் முதலாவதாக இராஜவிசுவாசப் பிரமாணத் தீர்மானம் நிறைவேற்றப்படும். வெள்ளையரை இந்நாட்டுக்கு அனுப்பிய தற்காகக் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படும். அவர்கள் ஆட்சி நீடூழி காலம் இருக்கவேண்டுமென்று வாழ்த்துச் செய்யப்படும். சென்னையில் 1915இல் நடைபெற்ற மாநாட்டில் இம்மாதிரி இராஜ விசுவாசத் தீர்மானம் காலை ஒருமுறையும், மாலையில் கவர்னர் விஜயத்தின்போது மற்றொரு முறையும் ஆக இரண்டு முறைகள் நிறைவேற்றம் ஆகியது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருந்துவருகிறது.
ஆகவே, வெள்ளையர் வழங்கிய உத்தி யோக சலுகைகளில் நம் இனத்தவருக்கும் உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம் பித்த பிறகுதான் - வெள்ளையர்களும் கொஞ்சம் நமக்குச் சலுகை தர ஆரம்பித்த பிறகுதான்- காங்கிரஸ் இயக்கமானது ஒரு தேசிய ஸ்தாபனமாக மாறி, வெள்ளையர்கள் வெளியேற வேண்டும் என்று கூறிற்றே ஒழிய, அதுவரை அது பார்ப்பனர்களுக்குப் பதவி தேடித் தரும் ஸ்தாபனமாகத்தான் இருந்துவந்தது என்பது கண்கூடு.
(திருச்சியில், 3.12.1950இல் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு
‘விடுதலை’ 14.12.1950)
ஆரியர்கள் அயோக்கியத்தனம்
ஆரியர்கள் எவ்வளவு அயோக்கியர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?
நம் நாட்டில் பிழைக்கவந்த - குடியேறிய ஆரியர்கள் எவ்வளவு அயோக்கியர்கள் என்பதையும் நம்மை மனிதத் தன்மை யோடு வாழவிடாமல் செய்து, அவ்வளவு கொடுமையும், அட்டூழியமும் செய்திருக் கிறார்கள் என்பதையும் உணரவேண்டு மானால் அவர்களால் எழுதப்பட்ட புராண இதிகாசங்களைப் பார்த்தால் நன்றாய் விளங்கும்.
வேதத்திலும் சாஸ்திர உபநிஷதங்களி லும் ஏராளமான அயோக்கியத்தனங்களும், கொலைபாதகங்களும் இருந்தாலும் அவைகளைச் சரியானபடி ஆதாரத்தோடு வெளிப்படுத்துவது என்பது என் போன்ற வர்களுக்கு அவ்வளவு சாதாரண காரியம் அல்ல என்றாலும், புராண இதிகாசங்கள் என்பவைகளைக் கொண்டு தக்க ஆதா ரங்களோடு வெளிப்படுத்துவது எளிதான காரியமேயாகும்.
புராணம் என்றால் பழைய கதை என்பது அகராதியில் பொருள். என்றாலும் புராணங்கள் என்றால் பழைய கதை என்று திரு.முன்ஷியே பல இடங்களில் குறிப் பிட்டிருக்கிறார்.
சாதாரணமாக ‘புராண’ என்கின்ற சொல்லுக்கே பழையது என்பது பொருள். இந்தியில் ஆனாலும், உருதுவில் ஆனாலும், நவா என்றால் புதியது; புராணம் என்றால் பழையது. இது சாதாரணச் சொல்! ஆகவே, அப்படிப்பட்ட பழங்கதை என் னும் பேரால் பார்ப்பனர் எழுதி வைத் திருக்கும் பாகவதம், விஷ்ணு புராணம் ஆகிய புராணங்களில் காணப்படும் கருத் துகள் சிலவற்றை, எடுத்துச் சொல்லுவோம். அதில் இருந்து ஆரியர்களின் மத ஆதா ரங்களின் அக்கிரமங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
விஷ்ணு புராணம்
விஷ்ணு புராணத்தில் ஓர் இடத்தில் அதாவது ஓர் அத்தியாயத்தில் காணப்படு வதாவது:
தேவர்கள் எல்லாம் விஷ்ணுவிடம் சென்று, “மகாவிஷ்ணுவே! பூலோகத்தில் அசுரர்கள், ராட்சதர்கள் எல்லோரும் ஜப, தபங்கள், தானதர்மங்கள் செய்து ஒழுக்கத் தோடு நடந்து வருகின்றார்கள். இதனால் தேவர்களாகிய - பிராமணர்களாகிய எங் களுக்கு மரியாதை இல்லாமல் போய்விடு கிறது. எங்களை மக்கள் மதிப்பதில்லை. தேவர்கள், பிராமணர்கள் என்பதற்காகவே நாங்கள் அடைந்துவந்த பெருமைகளையும் உரிமைகளையும் அடைய முடிவதில்லை. அவற்றில் அவர்களும் உரிமையும் பங்கும் கேட்கிறார்கள். அதனால் எங்களுக்குக் குறைந்துவிடுகின்றன. இதனால் நாங்கள் எங்கள் பெருமையை இழக்கவேண்டி இருக்கின்றது. ஆதலால் எங்களைக் காப் பாற்றி அருளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
இதற்கு விஷ்ணு பகவான் சொல்லு கிறார்: ‘நான் என் உடலில் இருந்து ஒரு மாயா மோகனை உண்டாக்குகின்றேன்; அவன் மக்களிடம் சென்று “தான தர்ம, ஜபதபம் செய்வதில் பிரயோஜனம் இல்லை. மக்கள் ஒழுங்காக அறிவின்படி நடந்தால் போதும்’’ என்று சொல்லிவிடுவான். அப் பொழுது நான் அவர்களை “நீங்கள் எல் லோரும் வேத சாஸ்திரப்படி நடவாமல் அறிவின்படி நடந்தவர்கள், விஞ்ஞானத்தை பிரதானமாய்க் கொண்டவர் கள். ஆதலால் நரகத்தில் இருக்கத் தகுந்த வர்கள்’’ என்று சொல்லி நரகத்தில் போட்டு அழித்துவிடுகிறேன்’’ என்று சொல்லி விட்டார்.
அதன்மீது அந்த மாயாமோகன் மக்க ளுக்குப் பகுத்தறிவைப் போதித்து, எல்லோ ரையும் வேத மார்க்கத்தைவிட்டு பகுத்தறி வுப்படியே நடந்து, எல்லா மக்களும் நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்றும் அதன் பயனாய் உலக போக போக்கியங்கள் யாவும் ஆரியர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமே கிடைத்து அவர்கள் சுகவாசியாக வாழ்ந்தார்கள் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
குறிப்பு: அந்த மாயாமோகன் போதித்த கொள்கைகள் புத்தியைப் பொறுத்த கொள்கை. ஆனதனால் அந்த மாயா மோகனுக்குப் புத்தன் என்று பெயர் ஏற்பட்டதாகவும் அதிலே இருக்கின்றது. இது விஷ்ணு புராணத்தில் உள்ளபடி தொகுக்கப்பட்டது.
- தந்தை பெரியார்
No comments:
Post a Comment