900 ஆண்டுகள் வழக்கிலிருந்த "வலங்கை, இடங்கை" ஜாதிகளை ஒழித்தது வெள்ளைக்கார ஆட்சி! செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

900 ஆண்டுகள் வழக்கிலிருந்த "வலங்கை, இடங்கை" ஜாதிகளை ஒழித்தது வெள்ளைக்கார ஆட்சி! செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு உரை

சென்னை, அக். 28- புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்ச் சியில் திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

சென்னை பெரியார் திடலில் கடந்த 24.-10.-2022 அன்று அன்னை மணியம்மையார் அரங் கில் புதுமை இலக்கியத் தென்றல் சார்பில் நடை பெற்ற 921 ஆம் நிகழ்வில், மாலை 7 மணியளவில் திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் 

சு. அறிவுக்கரசு “வலங்கை இடங்கை போராட்டம்” எனும் தலைப்பில் உரை யாற்றினார். இவ்வமைப் பின் தலைவர் செல்வ. மீனாட்சிசுந்தரம் தலை மையேற்று உரையாற்றி னார். அமைப்பின் செய லாளர் வை. கலையரசன் மற்றும் புலவர்கள் சீனி பழனி, பா. வெற்றியழகன் மற்றும் டி.ஆர்.ஆர். செங் குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயவைத்தலைவர் தனது உரையில், ”நீலகண்ட சாஸ்திரி, வெள்ளைக்காரர் மெக் கன்சி, வால்டர் எலியட்ஸ் என்ற புத்த பிக்கு ஆகி யோர் வலங்கை-இடங்கை புராணம் பற்றிய தகவல் களை வரலாற்றில் பதிவு செய்துள்ளதை சுட்டிக் காட்டினார். அதில் வால் டர் எலியட்ஸ் என்ற புத்தபிக்கு, ”பவுத்தத்திற் கும், வேத மதத்திற்கும்” இடையில் ஏற்பட்ட மோதல் தான் ”வலங்கை, இடங்கை” என்று குறிப் பிட்டிருந்தது பொருத்த மாக தெரிகிறது” என்று தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்த இரண்டு பிரிவிலும் தலா 98 ஜாதிகள் இருந்ததையும், அதில் வலங்கை ஜாதிக்கு மட்டும் சில சிறப்பு சலு கைகள் இருந்ததையும், அதனாலேயே இரண்டு தரப்புக்கும் விரோதம் வளர்ந்ததையும் எடுத்து ரைத்தார். இதன் காரண மாகவே தஞ்சையில் ஒரு கோயில் இடிக்கப்பட்ட தையும், ஒரு மன்னரே கொல்லப்பட்டதையும் தரவுகளுடன் எடுத்துக் காட்டி, 900 ஆண்டுகளாக நீடித்த இந்தக் கொடூர மான ஜாதி முறையை, வெள்ளைக்காரர்கள் வந்துதான் ஒழித்துக் கட் டினார்கள் என்பதையும் எடுத்தியம்பி தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக தோழர் இராவணன் மல்லிகா நன்றியுரை ஆற்றி நிகழ்ச் சியை முடித்து வைத்தார். நிகழ்வில் திராவிட மாண வர் கழக மாநிலச் செய லாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், நெய்வேலி ஞானசேகரன், பாலு மணிவண்ணன், அரும் பாக்கம் தாமோதரன், பெரியார் மாணாக்கன், தொண்டறம், நர்மதா, திவ்யா, ஆவடித் தோழர் கள் கார்த்திகேயன், வஜ்ரவேல், உடுமலை வடி வேல் மற்றும் அன்புச் செல்வன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புதுக்கோட்டை அன்பர சன், கடலூர் அரிமாவள வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



No comments:

Post a Comment