சென்னை, அக்.6 சென் னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ள தாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை, திரு.வி.க. நகர் மண்டல அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சென்னை மேயர் பிரியா, கடந்த வருடம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அப்பணிகள் தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ள சூழலில், எஞ்சியுள்ள 10 சதவீத பணிகளையும் விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள தாகவும் கூறினார். சென்னையில் மழைநீர் வடிகால் பணி நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைக்க அறிவுறுத்தப்பட் டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு வார்டுகளிலும் மழைநீரை வெளியேற்றுவதற்கு மின்மோட்டார்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், சேதமடைந்து விழக்கூடிய நிலையில் இருக்கும் மரங்களை கண்டறிந்து அகற்ற கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment