861 தரைப் பாலங்கள் மேம்பாலமாக மாற்றம் - அமைச்சர் எ.வ.வேலு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 20, 2022

861 தரைப் பாலங்கள் மேம்பாலமாக மாற்றம் - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை,அக்.20- தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் 861 தரைப் பாலங்களை மேம் பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று (20.10.2022) கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:

தென்காசி உறுப்பினர் பழனிநாடார் (காங் கிரஸ்): தென்காசி தொகுதியில் தரைப் பாலத்தை மாற்றி மேம்பாலம் கட்டித் தரவேண்டும்.

நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு: தங்கள் தொகுதிகளில் பாலங்கள் கட்டுவது குறித்து சட்டப்பேரவையில் பல்வேறு உறுப்பினர்கள் கேட்டு வருகின்றனர். தமிழ் நாட்டில் தற்போது 1,281 தரைப் பாலங்கள் உள்ளன. இவற்றை மேம்பாலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-2022-ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 648 பாலங்கள், நபார்டு கிராமப்புற சாலைகள் திட்டத்தில் 41 பாலங்கள் என 689 தரைப் பாலங்களை ரூ.755 கோடியில் மேம்பாலமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த 2022-2023-ஆம் நிதி ஆண்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில் 66, நபார்டு திட்டத்தில் 84, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 22 என 172 பாலங்களுக்கான பணிகள் எடுக்கப் பட்டுள்ளன. 2 ஆண்டுகளில் 861 தரைப் பாலங்களை மேம்பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் 2023-2024-ஆம் நிதி ஆண்டில் மற்ற பாலங்களும் மாற்றப்படும். இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment