கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வு நிறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 2, 2022

கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வு நிறைவு

மதுரை, அக்.2   சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நடைபெற்று வந்த 8 ஆம் கட்ட அகழாய்வு கடந்த வெள்ளிக்கிழமையுடன் (30.9.2022) நிறைவடைந்தது. இதையடுத்து, 9 ஆம் கட்ட அகழாய்வை தொடர்வது குறித்து தமிழ்நாடு அரசு முடிவு செய்ய வேண்டும் என, தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கீழடியில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி, 8 ஆம் கட்ட அகழாய்வு தொடங் கப்பட்டது. இதற்காக தமிழக அரசு சார்ர்பில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட் டது. கீழடியைத் தொடர்ந்து அருகே யுள்ள அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களிலும் அகழாய்வு விரிவு படுத்தப்பட்டது. ஆனால் மணலூரைத் தவிர்ர்த்து மற்ற 3 இடங்களிலும் அகழாய்வு நடைபெற்று வந்தது. இதில், கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளிலிருந்து சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய ஏராளமான அரிய பொருள்கள் கண்டறியப்பட்டன.

இவற்றில், சுடுமண்ணால் உரு வாக்கப்பட்ட பெண்ணின் முகம், உறைகிணறுகள் எனக் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பொருள்கள் கிடைத்தன. அதே போல் கொந்தகை அகழாய்வு தளத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. இவற்றிலிருந்து மனித மண்டை ஓடுகள், எலும்புகள், மண் குவளைகள், சூதுபவளங்கள், கண் ணாடி மணிகள், பாசி மணிகள், இரும் பால் செய்யப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டறியப்பட்டன.

அகரத்தில் அதிகமாக உறை கிணறுகள், செங்கல் கட்டுமானங்கள் காணப்பட்டன. இந்நிலையில், கடந்த 8 மாதங்களாக கீழடி, அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த 8ஆம் கட்ட அகழாய்வுப்பணி நிறை வடைந்தது.

இதைத் தொடர்ந்து இந்த அகழாய்வு தளங்களில் தோண்டப்பட்ட குழிகள் தார்பாய்களால் மூடப்பட்டன. இந்த அகழாய்வில் கிடைத்த பொருள் களை ஆவணப்படுத்தும் பணி இன்னும் சில நாள்களில் தொடங்க உள்ளது. இதனிடையே கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வு நிறைவடைந்துள்ள நிலை யில், 9 ஆம் கட்ட அகழாய்வை தொடங் குவது குறித்து தமிழ்நாடு அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என தொல் லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித் தனர். எனவே, 9 ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.


No comments:

Post a Comment