சென்னை அக்.30 இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு, இணைய வழியில் நடந்த முதல் சுற்று கலந்தாய்வு நிறை வடைந்தது. இதில், 5,647 எம்.பி.பி.எஸ்., - 1,389 பி.டி.எஸ்., இடங்கள் நிரம்பின. எம்.பி.பி.எஸ்.,சில் ஒரு இடமும்; பி.டி.எஸ்.,சில் 43 இடங்களும் காலியாக உள்ளன.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் உள்ள, அரசு ஒதுக்கீடு இடங்களில், மாணவர் சேர்க் கைக்கானஇணைய வழி கலந்தாய்வு இம்மாதம் 19ஆம் தேதி துவங்கியது. அன்றைய தினமே மாற்றுத் திறனா ளிகள், மேனாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாக நடந்தது; இதில், 65 இடங்கள் நிரம்பின. அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந் தாய்வு, 20ஆம் தேதி நடந்தது; இதில், 565 இடங்கள் நிரம்பின. இந்நிலையில், கலந்தாய்வு நடந்து வந்த பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு, 27ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற வர்களுக்கான இடங்கள் ஒதுக்கீட்டு விபரம், https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து, மருத்துவ கல்வி தேர்வுக்குழு செயலர் முத்துச்செல்வன் கூறியதாவது: அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு முதல் சுற்று கலந்தாய்வு முடிந்துள்ளது. இதில், 5,648 எம்.பி. பி.எஸ்., இடங்களில் 5,647 இடங்களும், 1,432 பி.டி.எஸ்., இடங்களில் 1,389 இடங்களும் நிரம்பி உள்ளன. இவர் களுக்கு எந்த கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டது என்ற விபரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இவர்கள் நவ., 4க்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில், பழங்குடியின பிரிவினருக்கான, ஒரு எம்.பி.பி.எஸ்., இடமும்; மூன்று சுயநிதி பல் மருத்துவக் கல்லூரியில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், அரசு ஒதுக்கீட்டில் 43 பி.டி. எஸ்., இடங்களும் காலியாக உள்ளன.
இந்த இடங்களும், முதல் சுற்றில் இடங்களை பெற்றவர்கள், கல்லூரி களில் சேராததால் ஏற்படும் காலியிடங்களும், இரண்டாம் சுற்று கலந் தாய்வில் நிரப்பப்படும். இரண்டாம் சுற்று கலந்தாய்வு நவ.,7இல் துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment