சென்னை,அக்.7- எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
ஊராட்சி, ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந் துள்ள 2381 அங்கன்வாடி மய்யங்களில் LKG மற்றும் UKG நடப்பு கல்வி ஆண்டு முதல் தொடர்ந்து இயங்க அனுமதி அளித் தும், 2381 தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பான அரசா ணையை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இல்லம் தேடிக் கல்வித்' திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார் வலர்களை மழலையர் வகுப்புகள் இயங் கும் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரி யராக நியமிக்கலாம் என்றும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது. இச் சிறப்பாசிரியர்களுக்கு பிழைப்பூதியம் ரூ.5000 மேலாண்மைக்குழு மூலம் மாதம் தோறும் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment