இந்திய அரசா - ஹிந்தி சமஸ்கிருத அரசா? திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நவ.4 இல் மாவட்டத் தலைநகரங்களில் ஹிந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

இந்திய அரசா - ஹிந்தி சமஸ்கிருத அரசா? திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நவ.4 இல் மாவட்டத் தலைநகரங்களில் ஹிந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்!

அனைவரும் அணிதிரள்வீர் தோழர்களே!

இந்திய அரசா - ஹிந்தி சமஸ்கிருத அரசா? திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஹிந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப் பாட்டம்  நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஹிந்தி எதிர்ப்பு என்பது இன்று நேற்று நடைபெறு வதல்ல. உண்மையைச் சொல்லப்போனால், வரலாற்று நெடுக நடைபெற்றுவரும் ஆரிய - திராவிடப் போராட் டத்தின் உள்ளடக்கமான கூறு என்று இதனைக் கூறவேண்டும்.

சமஸ்கிருதக் கலாச்சாரப் பண்பாட்டுப் படையெடுப்பா?

சமஸ்கிருத கலாச்சாரம் என்பது ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பே! ஹிந்தி, சமஸ்கிருத மொழிக் குடும்பத் தைச் சார்ந்ததே!

ஆரிய வேதக் கலாச்சாரம் எப்படி நான்கு வருணங் களைப் பிறப்பின் அடிப்படையில் பிளவுபடுத்தி - அதன் விளைவாக ஆயிரக்கணக்கான ஜாதிகளாகப் பரிண மித்து, நாம் திராவிடர் என்ற ஓரினக் கோட்பாட்டு உணர் வைச் சிதற அடித்ததோ, அதுபாலவே சமஸ்கிருத ஊடு ருவலால் தமிழ் பல மொழிகளாகச் சிதறுண்டுபோனது; தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பதெல்லாம் இந்த வகையில் உருக்குலைந்து உருவாக்கப்பட்டதே!

ஆச்சாரியார் அன்றே சொன்னார்!

ஆச்சாரியார் (ராஜாஜி) சென்னை மாநில பிரதமராக இருந்தபோது ஹிந்தியைத் திணித்தார். சமஸ்கிருதத்தைப் படிப்படியாகக் கொண்டு வரவே ஹிந்தியை இப்பொழுது கொண்டு வருகிறேன் என்று லயோலா கல்லூரியில் பேசவில்லையா?

நமது போராட்டங்கள் 

தொடர்ந்துகொண்டே உள்ளன!

1937 இல் தொடங்கிய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் இடையிடையே ஒன்றிய அரசுகளின் ஹிந்தித் திணிப் பின் காரணமாகப் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஹிந்தியைத் திணித்தால் தேசியக் கொடியை எரிப்பேன் என்ற போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவிக்கவில்லையா? (1.8.1955).

பிரதமர் நேருவின் உறுதிமொழி 

எங்கே? எங்கே?

பிரதமர் நேருவின் சார்பில், ஹிந்தித் திணிக்கப்படாது என்று அன்றைய முதலமைச்சர் காமராசர் உறுதிமொழி கூறியதன் பேரில், போராட்டத்தை ஒத்தி வைக்கிறேன் என்று தந்தை பெரியார் எழுதியது நினைவில் இருக் கட்டும்!

ஒத்தி வைக்கிறேன் என்று தந்தை பெரியார் கூறினாரே தவிர, போராட்டத்தை முடித்துக் கொள்கி றேன் என்று கூறவில்லை.

அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டின் முதல மைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டில் ஹிந்திக்கு இடமில்லை; தமிழ், ஆங்கிலம் மட்டுமே என்ற இரு மொழிக் கொள்கைக்கான சட்ட மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய பிறகு (23.1.1968) ஒன்றிய அரசு அடிக்கடி ஹிந்திப் பூச்சாண் டியைக் காட்டுவது சட்ட விரோதம் அல்லவா!

கடந்த சட்டசபையில்கூடத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே!

1968-க்குக் கூடப் போகவேண்டாம், இம்மாதம் நடை பெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில்கூட ஹிந்தித் திணிப்பை எதிர்த்துத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படவில்லையா? (18.10.2022).

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு குடியரசுத் தலைவரிடம் கொடுத்த அறிக்கை ஹிந்தித் திணிப்பில் பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசு எவ்வளவு மூர்க்கத்தனமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

ஹிந்தி தெரியாதவர்களுக்குப் பெருங்கேடு!

‘‘மத்திய பல்கலைக் கழகங்களிலும், அய்.அய்.டி., அய்.அய்.எம். முதலியவற்றிலும் ஹிந்தியே பயிற்று மொழியாக வேண்டும். இந்திய அரசின் நிர்வாகப் பணிகள் அனைத்திலும் ஹிந்தியை மட்டும் பயன் படுத்தவேண்டும். ஹிந்தியைப் பொது மொழியாக்கும் வகையில் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களிலும் ஹிந்தி மொழியே பயிற்று மொழியாக ஆக்கப்படவேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பில் கட்டாயத் தாள் களில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, ஹிந்தியை மட்டுமே முதன்மைப் படுத்த வேண்டும்'' என்று சொல்லப்பட்டுள்ளது. (ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாத மாணவர்களின் கதி என்ன?)

தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசு அலுவல கங்களில், ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத வர்கள் எப்படி பணியாற்ற முடியும்?

ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பல மாநிலங்களிலும், ஹிந்தி எதிர்ப்பு எரிமலை நெருப்பைக் கக்க ஆரம்பித்துவிட்டது.

திராவிடர் கழகத்தின் சார்பில் 

தொடர்வண்டி நிலையத்தில் ஹிந்தி அழிப்பு!

திராவிடர் கழகத்தின் சார்பில் ஹிந்தி எதிர்ப்பின் அடையாளமாக சென்னை எழும்பூர் - தொடர்வண்டி நிலையத்தில் ஹிந்தி எழுத்து  அழிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது (30.4.2022).

ஹிந்திக்கு எதிராக இந்தியா எங்கும் வெடித்துக் கிளம்பும் போக்கை ஒன்றிய பி.ஜே.பி. அரசு புரிந்து கொள்ளத் தவறினால், அதன் விளைவு விபரீதமாகி

விடும். கடும் விலையைக் கொடுக்க நேரிடும்!

நவம்பர் 4 இல் திராவிட மாணவர் 

கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நவம்பர் 4 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஹிந்தி எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் அறவழிப் போராட்டமாக நடைபெறும்.

திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நடை பெறவிருக்கும் இந்தப் போராட்டத்தில், கழகத்தின் அனைத்து அணியினரும் திரளாகப் பங்கேற்று, திராவிட மண்ணின் உணர்வை வெளிப்படுத்த வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

29.10.2022


No comments:

Post a Comment