தருமபுரியில் மாணவர் கழகம் சார்பில் ஹிந்தி திணிப்பை கண்டித்து நவம்பர் 4ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவதென முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 30, 2022

தருமபுரியில் மாணவர் கழகம் சார்பில் ஹிந்தி திணிப்பை கண்டித்து நவம்பர் 4ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவதென முடிவு

தருமபுரி, அக். 30- தருமபுரி மாவட்ட திராவிட மாணவர் கழகம் மற்றும் இளைஞர் அணி தோழர் கள் இணைந்து ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்புக்கு எதிராக  கண்டன ஆர்ப்பாட் டத்தை சிறப்பாக நடத்து வது என மாவட்ட மாண வர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.                                                      

தருமபுரி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட் டம் 29.10.2022 அன்று மாலை 3 மணி அளவில் தருமபுரி பெரியார் மன் றத்தில் மாவட்ட மாண வர் கழகத் தலைவர் 

சா. பூபதி தலைமையில், மண் டல கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் த.மு. யாழ்திலீபன், கருநாடக மாநில மாணவர் கழகத் தலைவர் மா.முனியப்பன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கண். இராமச்சந்திரன் ஆகி யோர் முன்னிலை வகித் தனர். மண்டல மாணவர் கழக செயலாளர் இ.சமர சம் வரவேற்றார்.

மாவட்ட தலைவர் வீ.சிவாஜி, மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில இளைஞரணி  துணை செயலாளர் மா.செல்ல துரை ஆகியோர் கருத் துரை ஆற்றினர்.

நிறைவாக ஹிந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்து வது தொடர்பாக மாநில திராவிடர் கழக அமைப் புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் சிறப்புரை யாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தப்படி நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தருமபுரி தொலைப்பேசி  நிலையம் முன்  மாவட்ட அளவில் மாணவர் மற் றும் இளைஞர்களை திரட்டி கண்டன ஆர்ப் பாட்டத்தை வெகு சிறப் பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ஆர்ப்பாட் டத்திற் காக மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி ரூபாய் 1000, மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் ரூபாய் 500,பகுத்தறிவாளர் கழகத் தோழர் புஷ்ப நாதன் அவர்களின் மகன் பெரியார் பிஞ்சு இராவ ணன் ரூபாய் 200, மா.முனி யப்பன் ரூ.200  நன் கொடை அளித்துள்ளனர்.

கலந்துரையாடல் கூட்டத்தில் மாணவர் கழகத் தோழர்கள், பெரியார் மன்ற உதவியா ளர் மஞ்சு, பெரியார் படிப்பக உதவியாளர் அருணா, மாணவர் கழ கத் தோழர்கள் தமிழவன் செ.சுப்பிரமணி, கு.அரி கரன்  நித்திஷ்குமார், குமார்  ஆகியோர் கலந்து கொண்டனர். பொ.அய் யனார் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment