கோவை, அக். 30- கோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 28-10-2022 வெள்ளி மாலை 6.30 மணிக்கு சுந்தராபுரம்,காராஜ்நகர் கண் ணப்பன் அரங்கத்தில் நடை பெற்றது.
பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் விடுதலை சந்தா சேர்ப்பில் இலகுவாக இலக்கை அடைவது எப்படி, கிராமப் பிரச்சாரம், அமைப்பு பணிகள் குறித்தும் விளக்கமாக உரையாற் றினார்கள்.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய ஆர்.எஸ்.எஸ் எனும் டிரோஜன் குதிரை நூல் அறிமுகக் கூட்டங்களை பொது வெளியில் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனவும்,
கோவை கழக மாவட்டத்தில் உள்ள கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், தொண் டாமுத்தூர், சூலூர், கிணத்துக் கடவு, கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, வால்ப்பாறை உள்ளிட்ட (9) சட்டமன்ற தொகுதிகளில் ஆதரவாளர்கள் தோழமை இயக்கத்தினர் சட்ட மன்ற மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரையும் சந் தித்து விடுதலை சந்தா இலக்கை முடித்து தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கி மகிழ்வது எனவும் டிசம்பர்-2 சென்னையில் நடைபெறும் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவிலும், டிசம்பர்-17 திருப் பத்தூரில் நடைபெறும் முப் பெரும் விழாவிலும் குடும்பத் துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யபட்டது.
திராவிட மாணவர் கழகம் சார்பில் நவம்பர் 4ஆம் தேதி ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை கோவையில் மிக எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய் யப்பட்டது.
கழக மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர், கழக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், மண்டல செயலாளர் சிற்றரசு, பொதுக்குழு உறுப்பினர் பொள் ளாச்சி பரமசிவம், மாநில இளை ஞரணி அமைப்பாளர் ஆ.பிரபா கரன் மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் இராகு லன், மாவட்ட அமைப்பாளர் தமிழ்செல்வன், மாவட்ட துணைச்செயலாளர் காளி முத்து, மாநகரத் தலைவர் க.வீர மணி, மாவட்ட இளைஞரணி தலைவர் திராவிடமணி, மாவட்ட தொழிலாளரணி தலைவர் ஆந்தசாமி, மாவட்ட தொழிலாளரணி செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொள்ளாச்சி கார்த்தி, மாவட்ட ப.க துனைச் செயலாளர் அக்கிரி நாகராசன், குறிச்சி குமரேசன், பொள்ளாச்சி நகர துணைத் தலைவர் இரவிச்சந்திரன், கோபாலகிருஷ்ணன், போத்த னூர் வெங்கடேசன், முத்து.மாலையப்பன் ஆட்டோ சக்தி, பிள்ளையார்புரம் ஆனந்த், பவ தாரணி உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்துகொண்டு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடி வுகளை செயல்படுத்திட உழைப் போம் என உற்சாகமாக உரை யாற்றினார்கள்.
No comments:
Post a Comment