தமிழ்நாட்டில் 489 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 3, 2022

தமிழ்நாட்டில் 489 பேருக்கு கரோனா

சென்னை, அக்.3 தமிழ்நாட்டில்  புதிதாக 284 ஆண்கள், 205 பெண்கள் என மொத்தம் 489 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்  புதிதாக 284 ஆண்கள், 205 பெண்கள் என மொத்தம் 489 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 101 பேர், செங்கல்பட்டில் 44 பேர், கோவையில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களை தவிர, அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. மேலும், 12 வயதுக்குட்பட்ட 53 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 66 முதியவர் களுக்கும்  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 391 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 415 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில்.....

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறை கிறது. புதிதாக 3,375 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  நேற்றுமுன்தினம் புதிதாக 3,805 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியானது. இந்தநிலையில் நேற்று (2.10.2022) புதிதாக 3,375 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 18 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,673-ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது வரை 37,444- பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.73 சதவிகிதமாக உள்ளது.  


No comments:

Post a Comment