கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தலா 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 6, 2022

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தலா 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சென்னை,அக்.6- கடந்த 3.10.2022 அன்று காலை சுமார் 9 மணியளவில், சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சார்லஸ் (வயது 38), பிருத்விராஜ் (வயது 36), தாவீதுராஜா (வயது 30), பிரவீன்ராஜ் (வயது 19), ஈசாக் (வயது 19) மற்றும் செல்வன். அண்டோ கெர்மஸ் ரவி ஆகிய ஆறுபேரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற போது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும்  தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் மூன்று இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட் டுள்ளேன்.

-இவ்வாறு தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment