வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 6, 2022

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

ஸ்டோக்ஹோம்,அக்.6- உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி 2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டது. அதில், அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக் கப்பட்டது இதனைத்தொடர்ந்து 2022-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு  அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான இயற்பியல் பரிசை 3 பேர் பெறுகின்றனர். அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப். கிளாசர், அன்டன் ஜெய்லிங்கர் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச் சிக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசு 

3 பேருக்கு வழங்கப்படுவதாக தேர்வுக்குழு  அறிவித்துள்ளது. இதன்படி இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு "மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும்" வழியை உருவாக்கியதற்காக கரோலின் ஆர். பெர் டோசி (அமெரிக்கா), மோர்டன் மெல்டல் (டென்மார்க்) மற்றும் கே. பேரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா) ஆகி யோருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.


No comments:

Post a Comment