புதுடில்லி. அக் 1 இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 947 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய (30.9.2022) பாதிப்பான 4 ஆயிரத்து 272-அய் விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கரோனாவால் பாதிக்கபட்டவர் களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 87 ஆயிரத்து 307 ஆக அதிகரித் துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 40 லட்சத்து 19 ஆயிரத்து 95 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட் டவர்களில் 39 ஆயிரத்து 583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 629 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 218கோடியே 52 லட்சத்து 16 ஆயிரத்து 710 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment