நாட்டின் 30% நிலத்தை வன உயிர்களுக்கு ஒதுக்கும் ஆஸ்திரேலிய அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 6, 2022

நாட்டின் 30% நிலத்தை வன உயிர்களுக்கு ஒதுக்கும் ஆஸ்திரேலிய அரசு

சிட்னி, அக்.6 உலகில் வேறு எங்கும் காணப்படாத உயிரினங்களுக்கு புகழ்பெற்ற ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களை பாதுகாக்கும் புது முயற்சியில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக 30 சதவிகித நிலத்தை வனவிலங்குகள் பாதுகாப்புக்கு ஒதுக்கு வதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் டான்யா பிலிபெர்செக் (ஜிகிழிசீகி றிலிமிஙிணிஸிஷிணிரி) தெரிவித்துள்ளார்

ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் ஏற்படும் காட்டுத்தீயில் பல ஏக்கர் கணக்கிலான காடுகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான அரிய வகை உயிரினங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வந்தன. மற்ற கண்டங்களை விட அதிகமான பாலூட்டி இனங்களை ஆஸ்திரேலியா கண்டம் இழந்துவிட்டதாக இந்தாண்டு ஜூலை மாதம் வெளியான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. 110 இனங்கள் மற்றும் 20 பகுதிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்பாக பல்லுயிர் பாதுகாப்பிற்காக நிர்வகிக்கப்படும் பரப்பு 50 மில்லியன் எக்டேர்களாக அதிகரிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 10 ஆண்டுத் திட்டமாக அறிமுகமாகும் இம்முயற்சி 2027ஆம் ஆண்டு மதிப்பாய்வு செய்யப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.பூர்விக தாவரங்கள் மற்றும் விலங் குகளைப் பாதுகாக்க உதவுவதற்காக 146 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது ஆஸ்திரேலிய அரசு. அதாவது இந்திய மதிப்பில் 1200 கோடி ரூபாயை பல்லுயிர் பாதுகாப்பிற்காக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் பாலூட்டிகளை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சிக்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment