சென்னை, அக். 29- குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர் பான ஆதாரமற்ற தகவல் களை நம்ப வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப் 2 தேர்வு முடிவு கள் குறித்து டிஎன்பி எஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "குரூப் 2 முதல் நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 21ஆம் தேதி நடைபெற்றது. இதற் கிடையில் மகளிருக்கான இடஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலு வையில் இருந்தன. இந்த வழக்குகளில் உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென் பொருளில் உரிய மாற்றங் கள் செய்யும் பணி நிறை வடையும் நிலையில் உள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். இது தொடர்பாக வெளியா கும் ஆதாரமற்ற தகவல் களை யாரும் நம்ப வேண் டாம். அதிகாரபூர்வ தக வல்களுக்கு லீttஜீ://tஸீஜீsநீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணைய தளத்தை அணுகலாம்" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment