புதுடில்லி. அக் 30- இந்தியா வில் கடந்த 24 மணி நேரத்தில் 1,574 - பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி யாகி உள்ளது. தற்போது சிகிச்சையில், 18,802 பேர் உள்ளனர்.
ஒன்றிய சுகாதாரத் துறை காலை 8மணியுடன் முடிவடையும் கடந்த 24மணி நேர கரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, இந் தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,574 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை கரோனா உறுதி செய்யப் பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரத்து 662- ஆக உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 0.95 சத விகிதமாக உள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து நேற்று (29.10.2022) 2,161 பேர் குணமடைந்துள்ள நிலை யில், இதுவரை இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 2 ஆயிரத்து 852- ஆக உயர்ந்துள்ளது. மீட்பு விகிதம் தற்போது 98.77% ஆக உள்ளது.
தற்போது கரோனா பாதிப்புடன் நாடு முழு வதும் சிகிச்சையில் உள் ளவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 802- ஆக உள் ளது.
கரோனா பாதிப்பால் 9 பேர் உயிரிழந்த நிலை யில், இதுவரை உயிரிழந் தவர்கள் எண்ணிக்கை 5,29,008- ஆக உயர்ந்துள் ளது. நாட்டில் இதுவரை 219.62 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப் பட்டுள்ளன.
இதுவரை 90.07 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன
No comments:
Post a Comment