சென்னை, அக்.21 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 235- பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், நேற்றைய பாதிப்பு 235 - ஆக பதிவாகியுள்ளது.தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- தமிழ்நாட்டில் 235 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 57 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 90,016 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 48,276 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று (20.10.2022) 408 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 3,692 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா பாதிப்பால் நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை
No comments:
Post a Comment