தாய்லாந்து துப்பாக்கிச்சூட்டில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் பலி காவல்துறை மேனாள் அதிகாரியின் காட்டுவிலங்காண்டித்தனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 7, 2022

தாய்லாந்து துப்பாக்கிச்சூட்டில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் பலி காவல்துறை மேனாள் அதிகாரியின் காட்டுவிலங்காண்டித்தனம்

பாங்காக்,அக்.7- தாய்லாந்து நாட்டின் நோங் பூவா  லாம்பூ மாகாணத்தில் உள்ள குழந் தைகள் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வில் 22 சிறுவர்கள் உள்பட 34 பேர் கொல்லப்பட் டுள்ளதாக தகவல் தெரிவிக் கப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 34 வயதான காவல்துறை மேனாள் அதிகாரி என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தியதை தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண் டதாகவும் கூறப்படுகிறது. இதில் மேலும் 12 பேர் காய மடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் போதைப்பொருள் வழக் கில் தொடர்புடைய காரணங் களுக்காக காவல்துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப் பட்டதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவர் மதிய உணவு நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய போது சுமார் 30 குழந்தைகள் மய்யத்தில் இருந்த தாக  அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் எட்டு மாத கர்ப்பிணி யான ஒரு ஆசிரியர் உட்பட நான்கு அல்லது அய்ந்து ஊழி யர்களை அவர் முதலில் சுட்டுக் கொன்றதாக மாவட்ட அதிகாரி கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டுள்ளார்.

பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது துப்பாக்கி வைத்திருப்பவர்களின் விகிதம் அதிகமாக இருந்தாலும், சட்டவிரோத ஆயுதங்கள் பொதுவானவை என்றாலும், தாய்லாந்தில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் அதிக நபர்களை கொல்வது என்பது மிக அரி தானதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக 2020-ஆம் ஆண்டில், சொத்து பேரத்தின் மீது கோபமடைந்த ஒரு பாதுகாப்பு  படை வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 29 பேர் கொலை செய்யப்பட்டனர். மேலும் 57 பேர் காயமடைந்தனர்.

No comments:

Post a Comment