சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 163 பேர் மீது வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 163 பேர் மீது வழக்கு

சென்னை,அக்.25- தமிழ்நாடு காவல்துறையால் பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந் தது. ஆனால் அதனை மீறி 24 மணி நேரமும் பட்டாசுகளை வெடித்துக் கொண்டே இருந்தனர். 

இது தொடர்பாக சென்னை மாநகர் முழுவதும் 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினர் அறிவிப்பை மீறி பட்டாசுகளை வெடித்ததாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல்துறையினர் நேற்று ரோந்து சென்று இந்த நடவடிக் கைகளை எடுத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, இதுபோன்ற நேரங்களில் மக்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது உள்ளது. இருப்பினும் தடையை மீறி பட்டாசு வெடித்ததற்காக 163 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment