சென்னை, அக்.30- தமிழ்நாட் டில் கடந்த சில வாரங் களாகவே கரோனா பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. அந்த வகையில் கரோனா பாதிப்பு 162- ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு விவ ரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;- தமிழ்நாட்டில் புதிதாக 95 ஆண்கள், 67 பெண்கள் உள்பட மொத்தம் 162 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள் ளது. அதிகபட்சமாக சென்னையில் 41 பேர், செங்கல்பட்டில் 13 பேர் உள்பட 30 மாவட்டங் களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. மருத்துவமனையில் 226 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். தமிழ்நாட்டில் நேற்று (29.10.2022) கரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்பட வில்லை. தற்போது கரோனா பாதிப்புக்குள்ளாகி 1,898 பேர் சிகிச்சையில் உள்ள னர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment