கருநாடகாவில் 16 தாழ்த்தப்பட்ட மக்களை பூட்டி வைத்து சித்ரவதை கர்ப்பிணிக்கு கருச்சிதைவு - பா.ஜ.க. ஆதரவாளர் செய்த கொடூரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 14, 2022

கருநாடகாவில் 16 தாழ்த்தப்பட்ட மக்களை பூட்டி வைத்து சித்ரவதை கர்ப்பிணிக்கு கருச்சிதைவு - பா.ஜ.க. ஆதரவாளர் செய்த கொடூரம்

பெங்களூரு, அக். 14- கருநாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட் டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத் தைச்  சேர்ந்த 16 தொழிலாளர் களை ஒரு வீட்டு அறையில் 15 நாட்களாக அடைத்து வைத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பாஜக ஆதரவாளர் இவர்  காபி தோட்ட உரிமையா ளர் ஆவார்.

இந்த கொடூரத்தில் தொடர்பு டையதாக கருதப்படும் ஜெக தீஷா கவுடா, அவரது மகன் திலக் கவுடா ஆகியோர் சேர்ந்து இரண்டு மாத கர்ப்பிணி உட்பட தாழ்த் தப்பட்ட மக்களைச் சித்ர வதை செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல் வெளியான பிறகு சம்பந்தப்பட்ட இருவரும் தலை மறைவாகி விட்டனர். அவர்களை காவலர்கள் தேடி வரு கின்றனர்.

உள்ளூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக பதிவு செய் யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின்படி ஜெகதீஷா கவுடா, தமது ஜென்னுகடே கிராமத்தில் உள்ள கவுடா தோட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை தினக்கூலிகளாக பணி யமர்த்தியுள்ளார். 

இது குறித்து உள்ளூர் காவல் துறை அதிகாரி கூறுகையில், "அக்டோபர் 8ஆம் தேதி, சிலர் தங்கள் உறவினர்களை ஜெகதீஷ் கவுடா சித்ரவதை செய்வதாகக் கூறி, பலேஹொன்னூர் காவல் நிலையத்துக்கு வந்தனர். ஆனால் இதனை அடுத்து ஜெகதீஷ் தரப் பினர் பிடித்துவைத்துள்ளவர் களை கொன்றுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததால், அவர் கள் புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டனர், " இருப்பினும் காவல்துறையினர் கவுடாவின் இடத்தை அடைந்தபோது அங் குள்ள அறையில் பலர் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந் ததை கண்டனர் என்று என்டி டிவி செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த 15 நாட்களாக தொழிலா ளர்கள் அந்த வீட்டின் அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந் தனர். 16 உறுப்பினர்களை கொண்ட நான்கு குடும்பங்கள் அங்கு இருந்தனர். அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந் தவர்கள்," என்று காவல்துறை அதிகாரி கூறினார்.

அக்டோபர் 9 ஆம் தேதி, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவ ரான அர்பிதா,கருவுற்றிருந்தார். காவல்துறை உதவியுடன் மீட்கப் பட்ட அவர் மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தானும் தனது கணவரும் கவுடா குடும்பத்தாரால் தாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக அப்ரிதா கூறினார். அவரது வயிற்றில் இருந்த குழந்தை கரு விலேயே இறந்ததாக மருத்து வர்கள் தெரிவித்தனர்.

நடந்த கோர நிகழ்வு தொடர் பாக சிக்மகளூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா பிரசாந்திடம் பேசினோம். அப் போது அவர், புகார் வந்த உட னேயே கவுடாவின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கு 8-10 பேர் வீட்டு அறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அந்த வீட்டு உரிமையாளரிடம் கேள்வி எழுப்பிய பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்," என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெகதீஷா கவுடா பாஜகவைச் சேர்ந்தவர் என்று அவர் அப்பகுதியில் முக் கிய பிரமுகர் பதவி கொடுக்கப் பட்டது என்றும் இந்த விவ காரம் வெளிவந்த பிறகு அக் கட்சி அவர் எங்கள் உறுப்பினர் இல்லை. எங்கள் ஆதரவாளர் மட்டுமே என்று கூறியுள்ளனர்


No comments:

Post a Comment