மூடநம்பிக்கையின் முடைநாற்றம் தென்கொரியா - பேய்களின் திருவிழாவாம்! கூட்ட நெரிசலில் சிக்கி 153 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

மூடநம்பிக்கையின் முடைநாற்றம் தென்கொரியா - பேய்களின் திருவிழாவாம்! கூட்ட நெரிசலில் சிக்கி 153 பேர் உயிரிழப்பு

சியோல், அக் 31- தென்கொரி யாவில் "பேய்களின் திரு விழா" எனும் ‘ஹாலோ' வின் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 153 பேர் உயிரிழந்துள்ள னர்.

இதாவோன் (Itaewon) பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் ஹாலோவின் கொண்டாடத்திற்காக வந்துள்ளனர். அங்கு கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த் தப்பட்ட காரணத்தால் பெரிய அளவிலான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது தான் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதியில் அமைந் துள்ள உணவு கூடத்தில் பிரபலம் ஒருவர் வந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து அவரை பார்க்கும் நோக்கில் அங்கு திரண்டிருந்த மக்கள் குறுகலான தெரு ஒன்றில் செல்ல முயன்று உள்ளனர். அப்போது தான் நெரிசல் ஏற்பட்டு உள்ளது. அதில் சிக்கிய மக்களில் சுமார் 153 பேர் உயிரிழந்துள்ளதாக தென் கொரிய நாட்டை சேர்ந்த அதிகாரிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. மாரடைப்புக்கு ஆளான சுமார் 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவ தாக தெரிகிறது.

No comments:

Post a Comment