சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் - மதுரை கலைஞர் நூலகத்திற்கு ரூ.15 கோடி மதிப்பில் புதிய நூல்கள் கொள்முதல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 6, 2022

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் - மதுரை கலைஞர் நூலகத்திற்கு ரூ.15 கோடி மதிப்பில் புதிய நூல்கள் கொள்முதல்!

சென்னை, அக்.6 - சென்னை அண்ணா நூற் றாண்டு நூலகம், மதுரையில் கட்­டப்­பட்டு வரும் கலைஞர் நூலகம் ஆகியவற்றுக்கு ரூ.15 கோடி மதிப்புக்கு புதிய நூல்களை கொள்முதல் செய்வதற்கான பணிகளை பொது நூலகத் துறை தொடங்கியுள்ளது. 

சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு   நூலகம் கடந்த 15.9.2010இல் அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்­பட்­டது. இந்த நூலகம் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிங்கப்பூர் நூல கத்தை போன்று உருவாக்கப்­பட்­டதாகும். இந்த நூலகத்தில் தற்போது பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்­பட்டு வருகின்றன. அதேபோல மதுரை புதுநத்தம் சாலையில் 2.7 ஏக்கர் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடியில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் ரூ.114 கோடியில் கலைஞர் நினைவு நூலகத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் டிசம்பருக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்­படுகிறது. இந்த நிலையில், இந்த இரு பெரும் நூலகங்களுக்கும் புதிய நூல்களைக் கொள்முதல் செய்வதற்கான பணிகளை பொது நூலகத் துறை தொடங்கியுள்ளது. 

அண்ணா, கலைஞர் நினைவு நூலகங்களுக்கு மொத்தம் ரூ.15 கோடியில் நூல்கள், மின் நூல்கள் கொள்முதல் செய்யப்­படும். குறிப்பாக, புதிதாக அமைய உள்ள கலைஞர் நூலகத்துக்கு 2.50 லட்சம் புத்தகங்கள் வாங்க திட்­டமிடப்பட்டுள்ளது. அதில் முதல்கட்ட கொள் முதல் தற்போது தொடங்கியுள்ளது. நூல்களை கொள் முதல் செய்வதற்காக அவற்றின் பட்டியலை அனுப்­பக்கோரி தென்னிந்திய புத்தக விற்­பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி), இந்தியப் படைப்பாளர், பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றில் இடம் பெற் றுள்ள நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள், பிற பதிப்பாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்­பப்பட் டுள்ளது. இந்த வார இறுதிக்குள் பட்டியல் கிடைத்ததும் எந்தெந்த புத்தகங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்­பதை அதற்காக அமைக்கப்­பட்ட மூத்த கல்வி யாளர்கள், பொது நூலக இயக்கக அதிகாரிகள் குழு வினர் முடிவு செய்வர் என அதிகாரிகள் தெரிவித்தனர். 


No comments:

Post a Comment