உரத்தநாடு, அக்.25 உரத்த நாடு நகரில் தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் விழா, ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோ ஜன் குதிரை விளக்க தெரு முனைக் கூட்டம் 20.10.2022 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு உரத்த நாடு நகர கழக தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன் தலைமையேற்று உரையாற் றினார். தஞ்சை மாவட்ட துணை செயலாளர் அ.உத்தி ராபதி, மாவட்ட விவசாயணி செயலாளர் பூவை இராம சாமி, தஞ்சை மண்டல இளை ஞரணி செயலாளர் முனை வர் வே.இராஜவேல் ஆகி யோர் முன்னிலையேற்று உரையாற்றினர். தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார் ஆகியோர் இக்கட்டத்தில் கலந்துகொண்டு தொடக்க வுரையாற்றினர்.
கழகப் பேச்சாளர் வழக் குரைஞர் பூவை. புலிகேசி கலந்துகொண்டு தந்தை பெரி யாரின் சுயமரியாதை சிந்த னைகளை, திராவிடர் கழகத் தின் சாதனைகளை, திரா விட மாடல் ஆட்சியின் செயல்பாடு களை எடுத்துக் கூறி, இதற்கு நேர் எதிர் கொள்கையை கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் தமிழ்நாட் டிற்கு வரவிருக்கும் பேரா பத்தை விளக்கி சிறப் புரை யாற்றினார்.
இக்கூட்டத்தின் தொடக் கத்தில் உரத்தநாடு நகர இளை ஞரணி செயலாளர் ச.பிர பாக ரன் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார்.
இந்நிகழ்வில் திமுக 12 ஆவது வார்டு செயலாளர் சேக். முகமது கனி, நெடுவாக் கோட்டை ஜெயசீலன், ஆயங் குடி மாதவன், உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள், தோழர் கள், பொதுமக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment