தமிழ்நாடெங்கும் தந்தை பெரியார் அவர்களின் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
கோவை மாநகரம்
கோவை மாவட்டத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாக்கள் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தியும், தந்தைபெரியார் படத்திற்கு மாலை அணிவித்தும், கழக கொடி ஏற்றியும் கோவையில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆத்துபாலம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு,
சுண்ணாம்புகால்வாய் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு,
வெள்ளளூர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு,,
புலியகுளம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு, மற்றும் ஒண்டிப்புதூர் வசந்தம் இராமச்சந்திரன் இல்லம் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவிப்பு,
வெள்ளலூர் குடிசை மாற்று வாரியம் பகுதியில் பெரியார் படத்திற்கு மாலை அணிவிப்பு,
குறிச்சி முருகாநகர் படிப்பகம் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவிப்பு,
கோவை ஜிடிநாயுடு நினைவு பெரியார் படிப்பகம் பெரியார் புத்தக நிலையம் பெரியார் படத்திற்கு மாலை அணிவிப்பு,
குனியமுத்தூர் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவிப்பு,
அஞ்சுகம் நகரில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவிப்பு
பிள்ளையார் புரம் தந்தை பெரியார் படத்திற்கு படம் மாலை அணிவித்து கழக கொடி ஏற்றியும், குறிச்சி பாவேந்தர் படிப்பகம் கழக கொடி ஏற்றியும் காமராஜர் நகரில் கழக கொடி ஏற்றியும், பிள்ளையார் புரம் பகுதியில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து கழக கொடி ஏற்றியும்,
குனியமுத்தூர் பேருந்து நிலையம் கழக கொடி ஏற்றியும், கோவை திராவிடர் கழகம் சார்பில் மாநகர, நகர, ஒன்றிய, கிளை கழகம் சார்பில் அனைத்து பகுதிகளிலும் கழக தோழர்கள் எழுச்சியுடன் பங்கேற்று தந்தை பெரியாரின் பிறந்த நாளை கொண்டாடினார்.
தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, 17.08.2022 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு, கோவை சிவானந்தா காலனி முதல் காந்திபுரம் பெரியார் சிலை வரை சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடத்தப்பட்டது
கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேரணியை துவங்கி வைத்தார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மற்றும் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர், செயலாளர் திக செந்தில் நாதன், மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், மற்றும் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம், தொழிலாளர் அணி, மற்றும் பெரியார் பிஞ்சுகள் உள்ளிட்ட மாவட்ட , மாநகர, நகர, ஒன்றிய, கிளைககழக பொறுப்பாளர்கள், தோழர்கள் ஏராளமானோர் பங்கேற்று எழுச்சி முழக்கம் எழுப்பி ஊர்வலத்தில் பங்கேற்றனர். நிகழ்வில் முற்போக்கு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தோழர்கள் கலந்து கொண்டனர்.
திருவையாறு
காலை 9 மணிக்கு திருவையாறு பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஒன்றிய தலைவர் ச.கண்ணன் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து பேரூர் தலைவர் கோ.கவுதமன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். சுமார் 25 திமுக தொண்டர்கள் திருவையாறு பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சி.என்.நாகராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற அரசாணை பிறப்பித்த திராவிட மாடல் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, உறுதிமொழி வாசிக்கப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது.
காலை 9 மணிக்கு ராயம்பேட்டையில் ஒன்றிய இளைஞ ரணி தலைவர் ஆ.கவுதமனால் சிறப்புற அமைக்கப்பட்டிருந்த கழகக் கொடியினை ஒன்றிய செயலாளர் துரை. ஸ்டாலின் ஏற்றி வைக்க சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொள் ளப்பட்டது. கண்டியூர் பெரியார் படிப்பகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழக காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் வே. ஜெயராமன் மாலை அணிவித்து உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பெரியார் சிலை அருகே அமைக்கப்பட்டு இருந்த கழக கொடியினை ஒன்றிய அமைப்பாளர் தோழர் மு. விவேக விரும்பி ஏற்றி வைத்தார். பேரூர் செயலாளர் மதுரகவியால் ஏற்பாடுகள் சிறப்புற செய்யப்பட்டிருந்தது.
காலை10:30 மணிக்கு மணத்திடல் மண்டல இளைஞர் அணி செயலாளர் இரா. மணிகண்டனால் ஏற்பாடு செய்யப் பட்ட கழகக் கொடியினை பெரியார் பெருந்தொண்டர் கோ.தங்கவேல் உயர்த்தி வைத்தார். 10.30மணிக்கு செந்தலையில் தோழர் கலையரசனால் அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கழகக் கொடியினை மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் இரா. மகேந்திரன் ஏற்றி வைத்தார். 11 .00 மணிக்கு வளப்பக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி வாயிலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு பெரியார் பெருந்தொண்டர் அழகேசன், இளைஞரணி தோழர் இளவரசனும் மாலை அணிவித்தனர். பெரியார் சிலையருகில் அமைந்துள்ள கழகக் கொடியினை மாவட்ட விவசாய அணித்தலைவர் இரா.பாலசுப்பிரமணியன் உயர்த்தி வைத்தார். பெரியார் பெருந் தொண்டர் அழகேசன் சிறந்த முறையில் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். வளப்பக்குடி கடைவீதி பெரியார் படிப்பகம் அருகில் அமைந்துள்ள கல்வி வள்ளல் காமராசர் சிலைக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் இரா. பாலசுப்பிரமணியன் மாலை அணிவித்தார். கழகக் கொடியினை ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மோகன்ராஜ் உயர்த்தி வைத்தார். கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் பெரியார் பெருந் தொண்டர் கோ. தங்கவேலு மதிய உணவு அளித்து சிறப் பித்தார்.
மதியம் 1.00 மணிக்கு விளாங்குடியில் ஓவியர் புகழேந்தி யின் இல்லத்தில் புகழேந்தியின் மகன் பு.அறிவேந்திரன் கழகக் கொடியினை ஏற்றிவைத்தார். மதியம் 1:30 மணிக்கு திருவையாறு பேரூர் தலைவர் கோ.கவுதமன் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடியினை கண்டியூர் பெரியார் அலி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து 1:45 மணிக்கு ஒன்றிய தலைவர் ச. கண்ணன் இல்லத்தில் அமைந்துள்ள கழகக் கொடியினைகொடியினை இளைஞர் அணி மண்டல செயல £ளர் இரா.மணிகண்டன் உயர்த்தி வைத்தார். அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப் பட்டது. கே.ராகுல், இ.இளவழகன். ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் இரா.தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கரூர்கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் திருமா நிலையூரில் உள்ள தந்தை பெரியாரின் வெண்கல சிலைக்கு கரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் குமாரசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கழகத்தின் மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சியில் பெரியார் உணர்வா ளர்கள் தமிழ் பற்றாளர்கள் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கீழப்பாவூர்
கீழப்பாவூரில் 18.9.2022அன்று பாண்டியனார் திடலில் திராவிடர் கழக இளைஞரணி திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி இயக்கங்கள் இணைந்து நடத்திய தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.வ.சவுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார். நெல்லை மண்டல மாணவர் கழக செயலாளர் சு.இனியன் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த நிகழ்வினை நெல்லை மண்டல செயலாளர் அய்.இராமச்சந்திரன் தொகுத்து வழங்கினார்.
இக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த.வீரன், கீழப்பாவூர் நகர தலைவர் மு.இராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் பி.பொன்ராஜ்,திமுக நகரச் செயலாளர் ரெ.ஜெகதீசன், திமுக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கா.இராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென் மண்டல கழக பிரச்சார குழு செயலாளர் சீ.டேவிட் செல்லதுரை, கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன், மாவட்ட கவுன்சிலர் இரா.சாக்ரடீஸ், தென்காசி மாவட்ட மகளிர் அணி தலைவர் மருத்துவர் கவுதமி தமிழரசன், திமுக மாவட்ட மாணவர் கழகத் துணை அமைப்பாளர் அருள்மணி ஜெபராஜ், திமுக மாவட்ட கழக பேச்சாளர் சகாயராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இந்த நிகழ்வில் திராவிடர் கழகத்தின் கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் கீழப்பாவூர் பேரூர் திமுக துணைச் செயலாளர் இல.அறிவழகன் ஒன்றிய கவுன்சிலர் சு.ஜான்சி ஜெயமலர் ஆதித்தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் வை.கலிவர்ணன் மற்றும் கீழப்பாவூர், மேலமெஞ்ஞானபுரம் கழக குடும்பங்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த கூட்டத்தில் மேலமெஞ்ஞானபுரம் தோழர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் தென்காசி மாவட்ட மாணவர் கழக தலைவர் தே.ம.அமுதன் நன்றி கூறினார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகரின் கவுதம்பேட்டை பகுதியில் அமைந் துள்ள ஆசிரியர் மணிகண்டனால் நடத்தப்படும் பகுத்தறிவா ளர் படிப்பகம். அதில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டா டப்பட்டது.
கழக மாவட்ட இணைச்செயலாளர் பெ.கலைவாணன், மண்டல இளைஞரணி செயலாளர் எ. சிற்றரசு, நகர அமைப் பாளர் முருகன் மற்றும் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஆகியோர் பங்கு பெற்று பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்கள். அங்கே பயிலும் 50 மாணவர்களுக்கு கழகம் சார்பில் பெரியார் 1000 புத்தகம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் கற்பி பயிலகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா முன்னிட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் உடையா முத்தூர் ஒன்றியத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நகர திராவிடர் கழக தலைவர் அன்புச் சேரன் தலைமையில் நாசீர்கான் மதிமுக நகர செயலாளர், இளங்கோவன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மற்றும் சந்தீப், தனசேகரன், கோபிகா, அரிப்பிரியா, பிரித்தி, பத்மபிரியா, ஜெயசிறீ, சேவக், கீர்த்தி குமார், தீனதயாளன், கவுசிக், வாணிப்ரியா, ஜெயலட்சுமி, தினேஷ்குமார், ஜெயசூர்யா, மற்றும் நகராட்சி கடைநிலை ஊழியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் பெரிய பிறந்த நாள் முன்னிட்டு ஏலகிரி மலை சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர், முனிரத்தினம், கிருஷ்ணராஜ் ரோட்டரி சங்கத் தலைவ, சின்ன தம்பி, ராஜேஷ், பொறியாளர் சூரியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் அய்யனார் கிராமத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோவன் தலைமையில் தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் கவுதம்பேட்டை பகுதியில் மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் குமார் தலைமையில் தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் பொதிகை கல்லூரி சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சார்பில் ஒன்றிய தலைவர் கனகராஜ் தலைமையில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள் கந்திலி ஒன்றிய மேனாள் சேர்மன் கு. ராஜமாணிக்கம், தோக்கியம் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தசீலன், கந்திலி மேற்கு ஓன்றிய செயலாளர் அசோக் குமார் ஏ. க. இளையராஜா, லட்சுமணன், சரவணன், சம்பத் முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரத்தின் சார்பில் சோமலாபுரம் நகர செயலாளர் வெற்றி தலைமையில் சுமார் 20 இடங்களில் பெரியார் படங்களை வைத்து உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்கள் இதில் பங்கேற்றோர். ரவி நகரத் தலைவர், ஆசிரியர் பன்னீர்செல்வம் துணைத் தலைவர், பெ. புரட்சி, இன்ப ராஜ், வெங்கடேசன், சாமி இளங்கோ மற்றும் மதிமுக நகரச் செயலாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம் பள்ளி தோழர் சங்கர் இல்லத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் கட்டேரி கிராமத்தில் தோழர் பாண்டியன் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.
தாராபுரம்
தாராபுரம் கழக மாவட்டம் தாராபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் சமூக நீதி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது தாராபுரம் பெரியார் சிலைக்கு நகர செயலாளர் ரா.சின்னப்பதாசு தலைமையில் கழகத் தோழர்கள் பெரியார் பிஞ்சுகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதனைத் தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மாலை அணிவித்தார்.
பொத்தேரி
17.9.2022 அன்று பெரியார் பிறந்தநாள் மிக பிரம்மாண்டமாக பொத்தேரி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்கலைக்கழக செல்வங்கள் மிக எழுச்சியோடு பெரியார் வாழ்க என முழக்கமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.
தரமணி
17.09.22 மாலை 6.30 மணியளவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தரமணி தந்தை பெரியார் நகர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
தருமபுரி
தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்றனர்.
பூவிருந்தவல்லி
அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 144 வது பிறந்த நாளை முன்னிட்டு பூந்தமல்லி பகுதி திராவிடர் கழகம் சார்பில் வடக்கு மலையம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 19-09-2022 திங்கள் கிழமை காலை 11-00 மணிக்கு மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.மாணவர் கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தந்தை பெரியார் படத்தை வரைந்தனர். இறுதியில் மாணவர்கள் அனைவருக் கும் கேசரி இனிப்பு கழகம் சார்பில் வழங்கப்பட்டது.நிகழ்ச் சியை பொதுக்குழு உறுப்பினர் தி.மணிமாறன் ஒருங்கிணைத்தார்.
No comments:
Post a Comment