தஞ்சையில் தந்தைபெரியார் 144ஆவது பிறந்த நாள் விழா பெரியார் பட ஊர்வலம் பொதுக்கூட்டம் - அனைத்துக்கட்சியினர் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 1, 2022

தஞ்சையில் தந்தைபெரியார் 144ஆவது பிறந்த நாள் விழா பெரியார் பட ஊர்வலம் பொதுக்கூட்டம் - அனைத்துக்கட்சியினர் பங்கேற்பு


தஞ்சாவூர், அக். 1- தஞ்சை ஒன்றிய மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா 24.9.2022 அன்று மாலை 6 மணியளவில் ரயில் நிலையம் தொடங்கி சிவகங்கை பூங்கா வரை அனைத்து கட்சி தோழர் கள் பங்குபெற்ற தந்தை பெரியார் பட ஊர்வலமும், சிவகங்கை பூங்கா எதிரில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

மாலை சரியாக 6 மணி அளவில் தஞ்சாவூர் தொடர்வண்டி நிலையத்தில் தஞ்சை மண்டல தலைவர் மு.அய் யனார் தலைமையேற்று உரையாற்றிட, கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஊர்வலத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். ஊர்வலத்திற்கு மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப் பிரமணியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பா.விஜயகுமார், மாவட்ட இளைஞ ரணி துணைச் செயலாளர் அ.சுப்பிர மணியன், மாநகர துணை தலைவர் துரை.சூரியமூர்த்தி, தஞ்சை மாநகர அமைப்பாளர் சே.தமிழ்ச்செல்வன், தஞ்சை தெற்கு ஒன்றிய அமைப்பாளர் அ.தனபால், மாவட்ட மாணவர் கழக தலைவர் இரா.கபிலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி தலைவர் ஆ.பிரகாஷ், ஒன்றிய இளைஞ ரணி செயலாளர் ஆ.ரமேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் க.மணி கண்டன், மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர் ஏ.விடுதலைஅரசி ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

ரயில் நிலையத்தில் தொடங்கிய பெரியார் பட ஊர்வலம் ஆற்றுப்பாலம், பெரியார் அண்ணா சிலை, கீழவாசல், கொண்டிராஜபாளையம், கீழவீதி, தெற்கு வீதி, மேல வீதி வழியாக 4 கிலோ மீட்டர் தூரம், 1 மணி நேரம் 35 நிமி டங்கள் பயணப்பட்டு சிவகங்கை பூங்கா எதிரில் நடைபெற்ற பொதுக் கூட்ட மேடையை வந்து அடைந்தது.

ஊர்வலம் நடைபெற்ற பாதையில் அமைந்திருந்த வணிக நிறுவனங்களில் ஏராளமான வணிக பெருமக்கள், தஞ்சை மாநகரில் கூடியிருந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட கழக பொறுப்பா ளர்கள் தோழர்கள் எழுப்பிய இன உணர்ச்சி முழக்கங்களை கேட்டும், தந்தை பெரியார் அவர்களது அலங்கரிக் கபட்ட உருவப்படத்தினை பார்த்தும் பெரு மகிழ்ச்சி கொண்டனர்.

கீழவாசலில் அமைந்திருந்த நட ராஜா ஜவுளி ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேந்திரன் பெரியார் பட ஊர்வலத்தில் கலந்து கொண்ட கழகத் தோழர்களுக்கு குடிநீர் வழங்கி சிறப்பித்தார். இவர் தொடர் விடுதலை வாசகர், கழக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர்வலம்

ஊர்வலம் தொடங்கியது முதல் முடியும் வரை கழக கொடியை கையில் ஏந்தி ஊர்வலப் பாதை முழுவதும் நடந்தே ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெரியார் பிஞ்சுகள் அ.வெ.கயல் (மாநில இளைஞரணி துணைச் செய லாளர் இரா.வெற்றிக்குமார்- தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோரது மகள்), வி.சின்னையன் (மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் விஜயகுமார் - சுசீலா ஆகியோரது மகன்), மா.இனியவன் (ஓட்டுநர் மணி அவர்களது மகன்) ஆகியோரை பொதுக்கூட்ட மேடைக்கு அழைத்து மண்டல மகளிர் அணி செய லாளர் தலா ரூ.100 வழங்கி பாராட்டி ஊக்கப்படுத்தினார்.

சிவகங்கை பூங்கா எதிரில் நடை பெற்ற பொதுக் கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற் றினார். 

கழக அமைப்பாளர் இரா.குணசேக ரன், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை மண்டல செய லாளர் க.குருசாமி, தஞ்சை மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் இரா.சேகர், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் பா.சுதாகர், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் க.அரங்கராசன் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப் பித்தனர்.

தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந் திரன் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார். மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டி யன், பெரியார் கூட்டமைப்பு பொறுப் பாளர் பொறியாளர் சித்திரக்குடி 

சு.பழநிராசன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி துணை பொதுச்செயலாளர் போராளி (எ) பசுபதி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் எம்.பி. நாத்திகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ச.சொக்காரவி உள்ளிட்ட பெருமக்கள் கலந்து கொண்டு கருத்துரை நிகழ்த்தினார்.

திராவிடர் கழக கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரையாற் றினார்.

பொதுக் கூட்டத்தின் தொடக்கத் தில் மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாவலர் பொன்னரசு, உறந்தை கருங் குயில் கணேஷ், உறந்தை கோபு ஆகி யோர் எழுச்சி மிகுந்த இன உணர்ச்சி பாடல்களை பாடி இசை நிகழ்ச்சி நடத்தினர்.

இறுதியாக தஞ்சை மாநகர செய லாளர் கரந்தை அ.டேவிட் அனைவருக் கும் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

கலந்துகொண்டவர்கள்

மாநில ப.க. ஊடகத்துறை தலைவர் மா.அழகிரிசாமி, மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிகுமார், மண்டல மகளிரணி செயலாளர் அ.கலை செல்வி, கழக பேச்சாளர் பூவை. புலிகேசி, மாநில மாநில பெரியார் வீரவிளையாட்டு கழக செயலாளர் நா.இராமகிருஷ்ணன், மாநில மாணவர் கழக துணை செயலாளர் க.கவிபாரதி, பொதுக்குழு உறுப்பினர் ச.மணியன், திருவோணம் ஒன்றிய தலைவர் சாமி.அரசிளங்கோ, உரத்தநாடு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், அம்மாப் பேட்டை ஒன்றிய தலைவர் கி.ஜவகர், அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் செ.காத்தையன், திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், மாவட்ட ஆசிரியரணி தலைவர் ந.சங்கர். மாவட்ட வழக்குரைஞரணி செயலாளர் இரா.சரவணகுமார், மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி, மாநகர ப.க.தலைவர் ப.மனோகரன், மாநகர ப.க.செயலாளர் மா. இலக்குமணசாமி, மாநகர ப.க. அமைப்பாளர் சாமி.கலைச்செல்வன், திருவோண ஒன்றிய ப.க.அமைப்பாளர் சி.நாகநாதன் மாவட்ட தொழிலாள ரணி தலைவர் ச.சந்துரு, மாவட்ட தொழிலாளரணி செயலாளர் செ.ஏகாம் பரம், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.அஞ்சுகம், உரத்தநாடு ஒன் றிய துணை தலைவர் இரா.துரைராசு, ஒன்றிய துணை செயலாளர் இரா. சுப் பிரமணியன், சாலியமங்கலம் நகர செயலாளர் துரை.அண்ணாதுரை, திருவையாறு ஒன்றிய ப.க. அமைப்பாளர் தமிழரசன், தஞ்சாவூர் ஒன்றிய பகுத் தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் கு. குட்டி மணி, பெரியார் பெருந்தொண்டர் தொண்டராம்பட்டு உத்திராபதி, தஞ்சை ஒன்றிய ப.க. அமைப்பாளர் களிமேடு அன்பழகன், உரத்தநாடு நகர தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன், உரத்த நாடு நகர இளைஞரணி அமைப்பாளர் ம.சாக்ரடிஸ், உரத்தநாடு மேற்கு பகுதி செயலாளர் இரா.மோகன்தாஸ், தஞ்சை மாநகர இளைஞரணி துணை தலைவர் அ.பெரியார்செல்வம், சாலிய மங்கலம் வை.ராஜேந்திரன், வல்லம் அழகிரி, கோபால் நகர் கருப்பையன், போட்டோ மூர்த்தி, தஞ்சை ரவிக் குமார், முத்துசெல்வன், திருப்பழனம் ஓவியர் புகழேந்தி, பேராசிரியர் குமார், முனைவர் சவுந்தராஜன், கரந்தை தனபால், மகளிரணி தோழர்கள் ஏ.பாக்கியம், வி.சுசிலா, இளைஞரணி தோழர்கள் திருவையாறு பிரபு, நடுவூர் கலையரசன், கோபால்நகர் ஜெகதீஸ், திட்டகுடி கார்த்திக், மாணவர் கழக தோழர் நிலவன் குடந்தை கழக மாவட் டத்தில் இருந்து வருகை புரிந்த தோழர் கள் ராணி குருசாமி, அறிவுவிழி யுவ ராஜ், ஜெயமணிகுமார், திரிபுரசுந்தரி, நாச்சியார் கோவில் சங்கர், பெரியார் பிஞ்சு ஆற்றல் சிற்பிகா. பெரியார் கூட்டமைப்பு பெரியார் பற்றாளர்கள் சித்திரக்குடி ப.ஆண்டவர் சு.கலைக் கோவன், சு.செல்லத்துரை, க.மகேந்திரன்.

திமுக தோழர்கள் மாநகரப் பொருளாளர் காளையார் சரவணன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் மனோகரன், பழக்கடை அன்பு, அசோகன், குழஞ்சியப்பன், பாலாஜி, செந்தில், அழகிரி, சுரேஷ் ரோஜ், முத்தமிழ் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் ஏரா ளமானோர் ஊர்வலத்திலும் பொதுக் கூட்டத்திலும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment