நாம்பென், அக்.2 கம்போடியாவில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் 141 ஆவது திருவள்ளுவர் சிலையை கம்போடியா அரசின் கலாச்சார மய்யத்தின் இயக்குநர் திருமிகு மோர் திறந்து வைத்தார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரா பிரியங்கா மற்றும் விஜிபி உலக தமிழ்சங்கத்தின் நிறுவனத் தலைவர் செவாலியர் விஜிபி சந்தோஷம் மேனாள் நீதிபதி டி என் வள்ளிநாயகம், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அங்கோர் தமிழ்ச் சங்கம் தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் ராமேஸ் வரன், டாக்டர் தணிகாசலம், உணவக உரிமையாளர் தமிழ்செல்வன், விஜிபி முதன்மை இயக்குநர் விஜிபி ராஜாதாஸ், ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பேராசிரியர் கு.வணங்காமுடி, விடுதலை வாசகர்கள் கவிஞர் கருமலைதமிழாழன், கவிஞர் ஒசூர் மணிமேகலை மற்றும் பல்வேறு தமிழ் சான்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment