தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சிறப்பு முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சிறப்பு முகாம்

சென்னை, அக். 29- தமிழ்நாட் டில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பல்வேறு காரணங்களால் உயர்க்கல்வியில் சேர வில்லை என்பது கண்டறி யப்பட்டுள்ளது. இம் மாணவர்களுக்கு உதவும் வகையிலும் ஆலோசனை வழங்கவும் பள்ளிக்கல்வித் துறை சார்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டில் கடந்த 2021-2022ஆம் கல்வி யாண்டில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களில் சிலர் அடுத்த கட்டமாக உயர்கல்வி கற்க கல்லூரி களுக்கு செல்லாமல் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இது குறித்து ஆராய்ந்த போது மாண வர்களின் குடும்ப சூழல், நிதிப் பற்றாக்குறை, சொந்த தொழில் செய்தல், வறுமை, படிப்பில் ஆர்வமின்மை, தாங்கள் வசிக்கும் பகுதி களில் கல்லூரிகள் இல் லாமல் இருத்தல் போன்ற காரணங்கள் கூறப்பட் டது. இந்த நிலையில் உயர்கல்வியில் சேராத மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பள்ளி ஆசிரியர்கள் வாயிலாக அவர்களை தொடர்பு கொண்டு பள்ளிக்கல்வித் துறை அவர்களுக்கு ஆலோ சனைகளை வழங்கியது. அதனை தொடர்ந்து மாணவர்களிடம் உள்ள குறைகளை கேட்டறிய வும் அவர்களை உயர் கல்வி கற்க ஊக்குவிக்கும் வகையிலும் பள்ளிகள் மூலம் சிறப்பு முகாம்களை நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது.

இதனையடுத்து அனைத்து மாவட்டங்க ளிலும் உயர்கல்விக்கான சிறப்பு முகாம் நடத்தப் பட்டு வருகிறது. இது வரை 2 முகாம்கள் நடத் தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment