திராவிடர் இயக்கக் கொள்கையாளர்களாக வாழும் லட்சிய வீரர்களின் தொண்டினைப் பாராட்டி ஆண்டுதோறும் முப்பெரும் விழாவில் தி.மு.க. விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகின்றது!
அதனை இன்றைய ஆற்றல்மிகு தி.மு.க. தலைவர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும், தொடர்ந்து தக்கவர்களை ஆண்டு தோறும் அடையாளம் கண்டு - பெருமைப்படுத்தி வருவது மிகவும் எடுத்துக்காட்டானது.
இவ்வாண்டு விருதாளர்களான பெரியார் விருது - திருமதி சம்பூர்ணம் சாமிநாதன்.
அண்ணா விருது - கோவை இரா.மோகன்
கலைஞர் விருது - தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.,
பேராசிரியர் விருது - குன்னூர் சீனிவாசன்
பாவேந்தர் விருது - புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு
ஆகிய தொண்டறச் சான்றுகள் பெறவிருக்கும் திராவிடச் செம்மல்களை தாய்க்கழகம் நெஞ்சாரப் பாராட்டி வாழ்த்தையும் தெரிவிக்கிறது.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
11.9.2022
No comments:
Post a Comment