தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம் ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 10, 2022

தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம் ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி,செப்.10- இந்திய கடல் எல்லைக் குள் அத்துமீறி நுழைந்து தமிழ்நாட்டு மீனவர் களை கைது செய்து வரும் இலங்கை கடற் படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும், இந்திய மீனவர்கள் கைது செய்யப் படுவதை தடுக்க உத்தரவிடக் கோரியும், இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கக்கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இவ்வழக்கு கடந்த 2-ஆம் தேதி விசா ரணைக்கு வந்த போது இவ்விவகாரம் தொடர்பாக உரிய உத்தரவுகளை ஒன்றிய அரசுக்கு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் கே.கே. ரமேஷ் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அப்போது, நீதிபதிகள் வழக்கை விசாரணைக்கு ஏற்பதாகவும், அதே வேளையில் விசாரணையை  ஒத்தி வைத் திருந்தனர். 

இவ்வழக்கு மீண்டும் நீதிபதி அனிருத்தா போஸ், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கபட்டனரா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜெய்சுகின், 86 மீனவர்கள் இதுவரை விடுவிக் கப்படவில்லை எனவும் தமிழ்நாட்டு மீனவர் களை இந்திய கடல் எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை தாக்கி கைது செய்கிறது. எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கையை வைத்தனர். அப்போது நீதிபதிகள் இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் விசாரணை வரம்புக்குள் வருமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில், இந்திய கடல் எல்லைக்குள்ளாக இந்த சம்ப வங்கள் நடப்பதால் உச்சநீதிமன்றம் இதில் தலையிட முடியும் என தெரிவித்தார். அப் போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக் குரைஞர் இந்த விவகாரத்தில் உரிய தரவு களுடன் பதிலளிக்க வேண்டியுள்ளது. எனவே அது தொடர்பாக உரிய துறையிடம் கேட்டு தெரிவிக்கிறோம் என கூறினார். இதனை தொடர்ந்து நீதிபதிகள், ஒன்றிய அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்கப்படுவதாக கூறி, இந்திய மீனவர்கள் எத்தனை பேர் இலங்கை சிறையில் உள்ளனர்? எத்தனை பேர் விடுவிக்கப்பட்டுள் ளார்கள் என்ற விவரத்தை ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து, ஒன்றிய அரசு தரப்பு உரியதுறையிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதற்கான அவகாசத்தை வழங்கி வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.


No comments:

Post a Comment