அமெரிக்க மனித நேயர் அமைப்பு
அன்றைய நாள் விருதளித்தது! (2019)
அண்டை நாடு கனடாவும் இன்று
கண்டுகொண்டதை வழிமொழிந்தது!! (2022)
கருவிகளால் வென்றெடுத்தல் தீது,
"கருத்தால் உலகை வெல்!" என்று,
கருணையுரைத்த கருஞ்சட்டைத் தலைவருக்கு
காது மடுத்து ஞாலம் நிற்கின்றது!
விருதுகள் தான் அவர் பணியை
விரைவாக்கும் என்பதொரு மாயை!
இருந்தாலும் எம்தலைவர் இன்புறுவார்!
இன்னாரின் தொண்டர் என்பாரதனால்!!
"பெரியாரைப் பாரெங்கும் பெருக்கும்
பேராளர் ஆசிரியரின் நோக்கம்
நிறைவேறும் காலம் நெருங்கியதென"
நேர்ப்பட மொழிந்தார் முதல்வரும்!
வரிசைக் கட்டி விருதுகள் பன்னூறு
வரித்துக்கொள்ளும் நெடு உழல்விலும்,
"பெரியாருக்கோர் ஆசிரியர்" எனப்பகலும்
பெருமைக்கே வேராவார் நம் தலைவரும்!!
- ம.கவிதா, திருப்பத்தூர்.
No comments:
Post a Comment