சென்னை,செப்.30 வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தலைநகர் சென் னையிலும் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.கனமழை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப் படுவதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் சென்னையின் அத்தனை தெருக்கள், சாலைகளிலும் மழை நீர் வடிகால்கள் அமைக்க திட்டமிடப் பட்டது. சில இடங்களில் மிக விரைவாக பணிகள் தொடங்கப்பட்டு முடிக்கப் பட்டன. பெரும்பாலான இடங்களில் இன்னும் வேலைகள் நடந்து கொண் டிருக்கின்றன. மேலும் பல இடங்களில் இப்போது தான் குழியை வெட்டி பணியை தொடங்குகின்றனர்.
சென்னையில் சில இடங்களில் மழை பெய்து வருவதால் அதில் தண்ணீர் தேங்கியும் வருகின்றது.
இந்நிலையில் சிங்கார சென்னை திட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறியுள்ளார்.
மேனாள் மேயர் சிவராஜின் 131ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தங்கசாலையில் உள்ள அவரது சிலை, படத்துக்கு அரசு சார் பில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் மரியாதை செலுத் தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா , “மழைநீர் வடி கால்களை பொறுத்தவரை சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சிங்கார சென்னை திட்டத்தில் இரண்டாக பிரித்து பணிகள் செய்து வருகிறோம்.
சிங்கார சென்னையைப் பொறுத்த வரை இரண்டில் ஒரு பகுதியில் 95 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. இரண்டாவது பகுதியில் 35 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த ஆண்டு சென்னையில் எந்த இடங்களில் வெள்ளத்தால் அதிகமாக பதிக்கப் பட்டதோ, அந்த இடங்களைத் தேர்வு செய்து அதற்கான பணிகளை மேற் கொண்டு வருகிறோம். இதில் இன்னும் 5 சதவீத பணிகள் மட்டுமே உள்ளன.அதுவும் அக்டோபர் 10ஆம் தேதிகுள் நிறைவடைந்துவிடும். வெள்ளத் தடுப்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கு 17 அய்ஏஎஸ் அதி காரிகளை நியமித்து இருக்கிறோம். மழைநீர் தேங்கும் பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகி றோம்” என்று கூறியுள்ளார்.மேயர் கூறியபடி அக்டோபர் 10ஆம் தேதிக் குள் பணிகள் நிறைவடைந்தால் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம்,
No comments:
Post a Comment