டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
நாம் என்ன சாப்பிட வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதில் நீதிமன்றங்கள், அரசுகள் தலையிட கூடாது என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
குஜராத் 2002 கலவரம் தொடர்பாக சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் தீஸ்தா செடால்வட்டிற்கு பிணையில் செல்ல உச்ச நீதி மன்றம் உத்தரவு.
தி இந்து:
சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது - ஒரு கட்டத் தில், மனுதாரரை சமஸ்கிருதத்தில் ஒரு பத்தி பேசும்படி நீதிபதிகள் கேட்டனர். விளம்பரத்திற்காக போடப்பட்ட மனு என கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தி டெலிகிராப்:
கடந்த 2013ஆம் ஆண்டு அய்.என்.எஸ். விக்ராந்த் கப்பல் தொடங்கப்பட்டது. நேற்று (2.9.2022) அதை கடலில் செலுத்தும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இது குறித்து ராணுவ வீரர் அஜய் சுக்லா ட்வீட் செய்ததாவது: “தேர்தல் பேச்சுக்கும் விமானம் தாங்கி கப்பலை இயக்கும் போது பிரதமர் பேசும் பேச்சுக்கும் இடையே உள்ள வித்தியாசம் மோடிக்கு தெரியவில்லை. ராணுவ வீரர்கள் அரசியல் பேச்சுக்கு கைதட்டுவதைப் பார்ப்பது வெட்கமாக இருக்கிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
அய்அய்டி, எய்ம்ஸ் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி.
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment