கடவுள் காப்பாற்ற வில்லையே! விநாயகன் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இருவர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 1, 2022

கடவுள் காப்பாற்ற வில்லையே! விநாயகன் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இருவர் உயிரிழப்பு

ராஜபாளையம், செப். 1- விருது நகர் மாவட்டம் ராஜ பாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் நேற்று இரவு (ஆக்.31) நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மின் கடத்தி மீது சப்பரம் மோதியதில் 2 பேர் மின் சாரம் தாக்கி உயிரிழந்த னர்.

சொக்கநாதன்ம் புத் தூர் பகுதியில் பேருந்து நிலையம் அருகே குலா லர் தெருவில் விநாயகர் சதுர்த்தி சப்பர ஊர்வலம் நேற்று இரவு நடைபெற் றது. ஊர்வலத்தில் சிறிய வர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சப்பரம் பேருந்து நிலை யம் அருகேசென்றபோது இடதுபுறமாக திரும்பி யது. அங்கிருந்த பெரிய மரத்தின் மீது மோதி நின் றுள்ளது. பின்னர் சப் பரத்தை வலது புறமாக திருப்பும் பொழுது அருகே வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டு சப்பரத் தில் சாய்ந்த்து. அப்போது ஃபிளக்ஸ் போர்டு மின் கடத்தியிலும் உரசியது. இதனால் மின்சாரம் சப் பரத்திலும் பாய, ஊர்வ லத்தில் சென்ற சொக்கநா தன் புத்தூரைச் சேர்ந்த முனீஸ்வரன் (24), மாரி முத்து (33), செல்வகிருஷ் ணன் (32), செல்லப் பாண்டி (42) ஆகியோர் மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்தனர்.

இவர்கள் 4 பேரும் மீட்கப்பட்டு தென்காசி மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சொல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர். சிகிச்சை பலனின்றி மாரிமுத்துவும், முனீஸ்வரனும் உயிரிழந் தனர். மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி, தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத் தில் தேரில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் பலியாகினர்.

கடந்த ஜூலை 31 ஆம் தேதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழைமைவாய்ந்த பிரக தாம்பாள் கோயில் தேர் விழுந்து விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில் ஒரு வர் உயிரிழந்த நிலையில் 9 பேர் படுகாயம் அடைந் தனர்.

இந்நிலையில், மீண்டும் ஒரு தேர் விபத்து நடந்துள்ளது. விநாயகர் ஊர்வலத்தில் நடந்த விபத்து சொக்கநாதன் புத்தூர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment