போபால்,செப்.10- மத்தியப் பிரதேச பா.ஜ.க.வில் குழு மோதல் தீவிரமடைந்துள்ளது மற்றும் ஊழல் புகார்கள் எழுந்துள்ள நிலையில், அம்மாநில முதலமைச் சரை மாற்ற பா.ஜ.க. மேலிடம் திட் டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில், முதல மைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்கு, நான்காவது முறையாக முதலமைச்சராக உள்ள இவர், பா.ஜ.க. வின் உயர்மட்ட குழுவான நாடாளுமன்றக் குழுவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார்; மாநிலத்திலும் அவருடைய செல் வாக்கு குறைந்து வருகிறது.கடந்த 2018இல் நடந்த சட்டசபை தேர் தலிலும் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும் பான்மை கிடைக்கவில்லை.
இதை அடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அக்கட்சியில் பிளவு ஏற்பட்டதால், முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. காங்கிரசில் இருந்து பிரிந்த ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.க.வில் இணைந்தார். அவ ருடன் கணிசமான சட்டமன்ற உறுப்பினர்களும் வந்ததால், சிவராஜ் சிங் சவுகான், 2020இல் மீண்டும் முதல்வரானார்.
சட்டசபைக்கு அடுத்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், கட்சியில் குழு மோதல் அதிகரித்துள்ளது. ஒன்றிய அமைச்சராக உள்ள ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் தேசிய பொதுச் செயலர் கைலாஷ் விஜயவர்க்கியா, எலியும், பூனையுமாக இருந்தனர். தற்போது இருவரும் நெருங்கிய நட்பு வைத்துள்ளனர். இதற்கி டையே, சில அமைச்சர்கள் வெளிப் படையாகவே, முதலமைச்சர் சவுகானுக்கு எதிராக தங்களுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இவர்கள், சிந்தியாவுடன் காங்கிரசில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க, பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு திரும்பிய பக்கம் எல்லாம், சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் அல்லது எந்த நேரத்திலும் முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் மாற்றப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
ஏற்கனவே அசாம், கருநாடகா, உத்தரகண்ட், குஜராத் என பல மாநிலங்களில் இதுபோன்ற அதிரடி நடவடிக்கை களை பா.ஜ.க. தலைமை எடுத்துள்ளது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment