சாவர்க்கரின் வாரிசுகள் இப்படித்தான் இருப்பார்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

சாவர்க்கரின் வாரிசுகள் இப்படித்தான் இருப்பார்கள்


சூத்திரர்கள் படித்ததால் தான் அமெரிக்கா சென்று தேசத்துரோகிகளாக மாறிவிட்டார்களாம்: சொல்வது அமெரிக்கவாழ் பார்ப்பனர்கள்

 அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் உள்ள ஆரஞ்ச் என்ற நகரில் ஆர்.எஸ்.எஸ். அயல்நாட்டுப் பிரிவு, இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் மற்றும் அமெரிக்கவாழ் ஹிந்து அமைப்பினர் இணைந்து ' இந்திய விடுதலை நாள் 75' என்ற தலைப்பில் கொண்டாட்டங்களை நடத்தினர் அப்போது இந்தியாவில் நடைபெறும் ஜாதிய ஒடுக்கு முறை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல், குறித்த பதாகைகளை ஏந்தி பார்ப்பனர் அல்லாத இந்தியர்கள் ஒன்று சேர்ந்து அமைதிப்பேரணி சென்றனர். இதனைப் பார்த்த விடுதலை நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் பேரணி சென்றவர்களை தாக்கி யும் அடித்தும் விரட்டி உள்ளனர். மேலும் அவர்களை தேசத்துரோகிகள் என்றும் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் கூட்டம் என்றும் வசைபாடினர், அப்போது கூட்டத்தில் உள்ள ஒருவர் (அசூத்) சூத்திரர்கள் உங்களுக்கு எல்லாம் கல்வி கொடுத்ததால் நாட்டையே காட்டிக்கொடுக்கத்துணிந்துவிட்டீர்கள். உங்களை எல்லாம் உங்கள் முன்னோர்களைப் போல் நடத்தி இருக்கவேண்டும், ஆனால் மோடி உங்களுக்கு கல்வியைக் கொடுத்து வசதிகளைச் செய்துகொடுத்தார், அதனால் நீங்கள் இங்கு வந்தீர்கள். இங்கு வந்து இப்படி செய்கிறீர்கள் என்றார். மேலும் ஒரு முதியவர் போராட்டக்காரர்களை நோக்கி ”இஸ்லாமியர்கள் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள். அங்கு தாக்குதலுக்கு ஆளாகிறார்கள் என்றால் அவர்களுக்காக இங்கே வந்து ஏன் அழுகிறீர்கள், முஸ்லீம் நாடுகள் நிறைய உள்ளன. அங்கே சென்றுவிடவேண்டியதுதானே" என்று கூறினார். அப்போது காவலர்கள் நீங்கள் சீனியர் சிட்டிசன் - உங்கள் இடத்திற்குச் செல்லுங்கள், அவர்கள் அமைதிப் பேரணிதானே நடத்துகிறார்கள் என்று கூறி அவரை அப்புறப்படுத்தி பேரணி தொடர பாதுகாப்பு கொடுத் தனர். இருப்பினும் பேரணி போகும் பாதையில் தேசத் துரோகிகள் ஒழிந்து போங்கள் வந்தே மாதரம், பாரத்மாதா கி ஜே என்று காட்டுக்கூச்சல் போட்டு பார்ப்பனர்கள் - கத்திக்கொண்டே சென்றனர். 

விடுதலை நாள் விழாவில் சிறுபான் மையினரை மிரட்டிய ஹிந்து அமைப் புகள்  தடாலடியாக அமெரிக்க அரசிடம் மன்னிப்புக்கடிதம் எழுதியுள்ளன.

 அமெரிக்காவில் நியூஜெர்ஸி நகரில் நடந்த 75 ஆம் ஆண்டு விடுதலை நாள் கொண்டாட்டத்தின் போது இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகவும் நடக்கும் வன்கொடுமை மற்றும் பேச்சு ரிமை எழுத்துரிமையை நசுக்கும் மோடி அரசுக்கு எதிராக விழிப்புணர்வுப் பேரணி நடத்தியவர்களை அங்குள்ள ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்கி வசைபாடி விரட்டினர்.

மேலும் புல்டோசர் ஒன்றில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத்தின் படத்தை ஒட்டி வைத்து எங்களுடன் மோதினால் உத்தரப்பிர தேசத்தில் சாமியார் ஆதித்யநாத் எப்படி புல்டோசர் கொண்டு இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்தாரோ அதே போன்று நாங்களும் செய்வோம் என்று புல்டோ சரைக் கொண்டுவந்து மிரட்டினர்.  இது தொடர்பான காட்சிப் பதிவுகள் வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  (விடுதலை ஞாயிறுமலர், 20.8.2022)

இந்த நிலையில் இந்த மனிதாபிமான உரிமைமீறல் மற்றும் சிறுபான்மையினரை மிரட்டியது தொடர்பாக நியூஜெர்சி மாகாண நிர்வாகம் ஹிந்து அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. 

 மேலும் ஹிந்து அமைப்புகள் மீது விசாரணை செய்து அவர்களுக்கான விசாக்களை ரத்து செய்யவும் உத்தர விட்டிருந்தது.   இந்த நிலையில் அங்குள்ள ஹிந்து அமைப்புகள் மற்றும் இந்திய தூதரகம் சார்பில் அமெரிக்க அதிகாரி களுக்கு இந்திய வணிகர்கள் அமைப்பு என்ற போர்வையில் ஒளிந்துகொண்டுள்ள ஹிந்து அமைப்புகள் 30.08.2022 அன்று எழுதிய கடிதத்தில் ,

 ”நாங்கள் இந்தியாவின் 75 ஆவது விடுதலை ஆண்டுவிழாவைக் கொண் டாடினோம் - அதில் நாங்கள் அழைத்து கொண்டது  சில விருந்தினர்கள் அத்துமீறி நடந்தது குறித்து நாங்கள் அறிந்துகொண் டோம். இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.  மேலும் விருந்தினரில் ஒருவர் எங்களுக்கு - தான் பேசுவது குறித்த குறிப்புகளை முன்பே கொடுக் காமல் அவர் மேடையேறி பேசிவிட்டார். அதில் சில கடுமையான சொற்கள் இருந் ததாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் கூறினர்.

இதை நாங்கள் எப்போதுமே ஏற்றுக் கொள்ளமாட்டோம். அவ்வாறு பேசிய விருந்தினரை இனிமேல் அழைக்கமாட் டோம் என்று கேட்டுக்கொள்கிறோம்.  மேலும் புல்டோசரை கொண்டுவந்ததும் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிடையாது. அது ஒரு தனி நபர் செய்த அநாகரீகமான செயல்-இதையும் நாங் கள் கண்டிக்கிறோம் இனி இது போன்ற எந்த ஒரு செயலையும் எங்கள் நிகழ்ச்சி களில் அனுமதிக்கமாட்டோம்.   தெற்காசி யாவில் உள்ள நாடுகளில் வசிக்கும் அனைத்து மதமக்களோடும் மிகவும் நல் லெண்ணத் தோடு நாங்கள் ஒற்றுமை யுடன் பழகி வருகிறோம். அன்று நடந்த செயல்களால் யார்மனதும் புண்பட நேர்ந்தால் நாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக்கொள்கிறோம்”

என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மன்னிப்பிற்கு புகழ்பெற்றவர் சாவர்க் கர். நாடே விடுதலை வேட்கையோடு போராடி ஆங்கிலேயர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகியும் கொடுங் காவல் தண்டனை பெற்று சிறையிலும் வாழ்ந்துகொண்டு இருந்த பல்லாயி ரக் கணக்கான இந்தியர்களின் மத்தியில் கொல்கத்தா சிறை மற்றும் அந்தமான் சிறையிலிருந்து 22 மன்னிப்புக் கடிதங் களை எழுதிய சாவர்க்கர், விடுதலை ஆன பிறகு மாதம் 60 ரூபாய் அன்றைய கால கட்டத்தில் உதவித்தொகையாக பெற்றார். 

 அவரின் கொள்கை வாரிசுகள் தானே - ஆகவே தான் தடாலடியாக விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டனர். 

(சாவர்க்கர் இதுவரை 22 மன்னிப்பு கடிதங்களை எழுதியுள்ளார். இதில் 10 கடிதங்களுக்கான சான்றுகள் மறைக்கப் பட்டு விட்டது, அல்லது அழித்துவிட்டார் கள். 11 கடிதங்கள் மட்டுமே தற்போது ஆவ ணங்களில் உள்ளன. தற்போது உள்ள கடிதமும் இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் அந்த ஆவணங்கள் வெளி யாகி உள்ளன. அதுவும் இங்கேயே இருந் திருந்தால் பார்ப்பனர்க்கூட்டம் அதையும் அழித்து சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதவே இல்லை என்று கூறி யிருப்பார்கள்).

No comments:

Post a Comment