ஒரத்தநாடு, செப். 11- தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கொள்கை பற்றாளர், சுயமரியாதை சிந்த னையாளர், வாழ்நாள் விடு தலை வாசகர், தலைமை ஆசிரி யர் க.வீராசாமி அவர்களின் சிலை திறப்பு, சிறப்பு மலர் வெளியீடு மற்றும் முதலாம் ஆண்டு நினைவேந்தல் விழா நடைபெற்றது. 9.9.2022 வெள்ளி அன்று மாலை 5.30 மணி அளவில் உரத்தநாடு திருவள்ளுவர் நகரில் வாழ்நாள் விடுதலை வாசகராக இறுதிக் காலம் வரை விடுதலை ஏட் டினை தொடர்ந்து படித்தும், ஆதரவு கொடுத்தும் வந்த தலைமை ஆசிரியர் க.வீராசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, சிலை திறப்பு, சிறப்பு மலர் வெளியீடு ஆகிய நிகழ்வுகள் நடைபெற் றன.
நிகழ்விற்கு வருகை புரிந்த அனைவரையும் அவருடைய மூத்த மகன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் கல்வியியல் துறை தலைவர் முனைவர் வீ.அம்பேத்கர் வரவேற்று உரையாற்றினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட திராவிடர் கழக பொதுச்செயலாளர் தஞ்சை ஜெயக்குமார் இந்நிகழ் விற்கு தலைமையேற்று அய்யா வீராச்சாமி அவர்களின் நினை வுகளை எடுத்துக் கூறி உரை யாற்றினார். தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் சி.அமர் சிங், உரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா குணசேகரன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றி னர்.
தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வீராசாமி அவர்களின் சிலையினை திறந்து வைத்து சிறப்பு மலரினை வெளியிட்டு நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். இந்நிகழ் வில் திருக்காட்டுப்பள்ளி அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் ராஜா.வரதராஜா, பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் ஆ.தோழப்பன், தஞ்சை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் அ.அருணகிரி, தமிழய்யா கல்விக் கழகம் மற்றும் அவ்வை கோட்டம் நிறுவனத் தலைவர் முனைவர் மு.கலைவேந்தன், அந்தமான்-நிக்கோபார் தீவுகள் கல்வித் துறை இயக்குநர் எம்.அய்ய ராசு, திங்களூர் முனைவர் கார் முகில் பழனிச்சாமி, அண்ணா மலை பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பேராசிரி யர் முனைவர் ஞானதேவன், ஆகியோர் சிறப்பு மலரினை பெற்றுக் கொண்டு உரையாற் றினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழக மாநில கலைத்துறை செய லாளர் தெற்கு நத்தம் சித்தார்த் தன், மாவட்ட துணை செயலா ளர் அ.உத்திராபதி, உரத்தநாடு நகர தலைவர் பேபி ரே.ரவிச் சந்திரன், ஒரத்தநாடு ஒன்றிய அமைப்பாளர் பு.செந்தில் குமார், மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.ராஜவேல், உரத்தநாடு மேற்கு பகுதி செயலாளர் இரா.மோகன் தாஸ், தஞ்சை ஒன்றிய பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் களிமேடு அன்பழகன் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என ஏராளமா னோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஆசிரியர் வீராசாமி அவர்களின் இளைய மகன் பூண்டி புஷ்பம் கல்லூரியின் பேராசிரியர் வீ.அறவாழி அனை வருக்கும் நன்றி கூறவிழா இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment