பேக்கிங் உணவுகளில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும், அந்த தேதிக்கு பின்னர் அவ்வுணவுகளை உட்கொள்வது குறித்த அச்சம் உண்டு. ஆனால் சில உணவுப் பொருட்களை காலாவதி தேதிக்குப் பின்ன ரும் சமைத்துச் சாப்பிடலாம். அரிசி, பருப்பு, எண்ணெய் வகைகளை ஆண்டுக் கணக்கில் சேமித்து வைத்துச் சாப்பிட்டுப் பழகியவர்கள் நாம். இன்னும் கிராமங்களில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைபவற்றை அப்படி சேமித்து வைத்துதானே சாப்பிடு கிறார்கள். மளிகைப் பொருட்கள் பாக்கெட்டு களில் அடைத்து விற்கப்பட ஆரம்பித்த பின்பே காலாவதி தேதி என்ற விஷயம் நமக் குப் பழக்கமானது. அப்படி எவற்றை சாப்பிட லாம், எவற்றை சாப்பிடக்கூடாது என்பதை அறிந்துகொள்வோம்.
இன்று நமது சமையலறையை பேக்கிங் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆக்கிரமித்துள்ளன. இவற்றின் காலாவதி தேதி குறித்த கவலைகள் அனைவருக்கும் உண்டு. சில உணவுகள் கெட்டுப்போவதை நாம் அறிந்துகொள்ள முடியும். பால் புளித்துப் போகும், சீஸில் பூஞ்சை வளர்ந்திருக்கும், இறைச்சிகள் கெட்டுப்போகும். இதனால் உண வுப் பொருட்களின் காலாவதி குறித்து எச்சரிக் கையாக இருக்க வேண்டியது அவசியம் தான். அதே சமயம் சில உணவுப் பொருட்களை முறையாக சேமித்து வைத்தால் அதனை காலாவதி தேதிக்கு பின்னரும் சாப்பிடலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வா கத்தின் புட்கீப்பர் செயலியில் கூறப்பட்டு உள்ளது.
அதில் குளிர்பானங்கள், பால் பொருட்கள், முட்டை, இறைச்சி, கடல் உணவுகள், சைவ புரோட்டீன்கள் என பல உணவு வகைகளின் தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை கிளிக் செய்தால் எப்படி அதனை வைத்திருந்து அதிக தரத்துடன் உண்ணலாம் என்பதை அறியலாம். சில உணவுகள் விரைவில் வீணா கும். சில பரிந்துரைக்கப்பட்ட காலத்தை தாண் டியும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என விளக்கியுள்ளனர். அத்தகைய உணவுகளின் பட்டியலை பார்ப்போம்.
கேனில் அடைக்கப்பட்ட உணவுகள் ஆண்டுக்கணக்கில் கெட்டுப்போகாது என் கின்றனர். அதனை 75 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் சேமிக்கும் போது இரண்டு முதல் அய்ந்து ஆண்டுகள் சாப்பிடலாம். புடைத்திருக்கும் கேன்களில் இருப்பவற்றை சாப்பிடக்கூடாது என கூறுகின்றனர்.
உறைய வைக்கப்பட்ட உணவுகளும்
மாத கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்கும். அதே சமயம் நாட்கள் ஆக ஆக அதன் தரம் குறையத் தொடங்கும். ஃப்ரோசன் புட்ஸ் என புட்கீப்பர் செயலியில் தேடினால் மேலதிக விவரங்கள் கிடைக்கும்.
முட்டை - வெளிநாடுகளில் முட்டை கார்ட்டன்கள் காலாவதி தேதியுடன் வரும். நம்மூரில் அப்படி கிடைப்பதில்லை. பொது வாக முட்டையை வாங்கி 3 முதல் 5 வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.
பிரெட் - இதன் காலாவதி தேதி 5 நாள்க ளுக்குள் போட்டிருப்பார்கள். ஆனால் அந்த தேதியை தாண்டியிருந்தாலும் அந்த பிரெட்டை சாப்பிடலாம் என்கின்றனர். ப்ரீசரில் வைத் தால் அது நீண்டகாலம் புதிதாக இருக்குமாம். அதே சமயம் பூஞ்சை உருவான பிரெட்களை உட்கொள்ளக்கூடாது.
பாஸ்தா - நார்ச்சத்து அதிகம் கொண்ட பாஸ்தாவினை காற்றுப்புகாத பெட்டியில் வைத்திருந்தால் 2 ஆண்டுகள் வரை கூட பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். அதனை பிரித்திருந்தால் அதன் காலாவதி ஓராண்டாக சுருங்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
சர்க்கரை - இது கெட்டே போகாது என் கின்றனர். சுத்தமான நீர் படாத கண்டெய்னரில் வைத்திருந்தால் அப்படியே இருக்குமாம்.
பீனட் பட்டர் - இதனை திறக்காமல் வைத்திருந்தால் காலாவதி தேதி முடிந்திருந்தாலும் உண்ணலாம் என்கின்றனர். திறந்து பயன்படுத்தி மிச்சமிருந்தால் தரம் குறைந்திருக்கும், அதற்காக அதனை சாப்பிடுவது பாதுகாப்பற்றது என கூற முடியாது என தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய உணவுகள்
சில உணவுகள் மிகவும் பழையதாக இருந்தால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அந்த பட்டியலில் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி போன்ற வற்றை வாங்கிய சில நாட்களில் பயன்படுத்தி விட வேண்டும். உறைய வைத்தாலும் கூட அவை சில மாதங்கள் தான் தாங்கும் என் கின்றனர். அதே சமயம் நம்மூரில் ஒரே ப்ரீசரில் எல்லா பொருட்களையும் அடைத்து வைப்பார்கள் என்பதால் இவை நம்மூருக்கு சரி வராது.
பழங்கள் - இதனை ஒரு வாரத்திற்கு மேல் ப்ரீஸ் செய்யக் கூடாது. ஆப்பிள்கள் அறை வெப்பநிலையிலேயே நீண்ட நாட்கள் இருக்கும். மற்றவை ஒரு வாரத்திற்கு மேலான தாக இருந்தால் அதன் தோல்கள் சுருங்கி புள்ளிகள் ஏற்பட்டு கெட தொடங்கியிருக்கும். அதனை சாப்பிடக்கூடாது.
துர்நாற்றம் வீசும் எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. அவற்றை குப்பையில் தூக்கி எறியுங்கள்.
No comments:
Post a Comment