சென்னை,செப்.22- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தி.மு. கழக துணைப் பொதுச் செய லாளரும், மேனாள் ஒன்றிய அமைச் சருமான ஆ.ராசா அவர்களின் சமீபத்திய உரையை முன்வைத்து, பாரதீய ஜனதா கட்சியும், மதவெறி அமைப்புகளும் தமிழ்நாட்டில் வன்முறையை தூண்ட முயற்சிக்கின்றன.
மனுஸ்மிருதியில், ஜாதிய முறையை நியாயப்படுத்தியும், இந்தியாவின் பெரும்பகுதி மக் களை இழிவுபடுத்தியும் உள்ள வாசகங்களை எடுத்துக் கூறியும், இவை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கங்களுக்கும், விதிகளுக்கும் எதிராக உள்ளதையும் ஆ.ராசா தன் உரையில் குறிப்பிட் டுள்ளார்.
ஆனால் பாரதீய ஜனதா கட்சியும், மதவெறி அமைப்பு களும் ஆ.ராசா இந்து மதத்திற்கு எதிராக பேசியதாக திரித்துக் கூறி தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க முயற் சிக்கின்றனர். இவர்களுக்கு கருத்துச் சுதந் திரத்தின் மீது எப்பொழுதுமே நம்பிக்கை இருந்த தில்லை. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையை நாடுகின்றார்கள். இவர் களின் இத்தகைய நட வடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. மேலும் ஆ.ராசா உயி ருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள வர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ் நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. -இவ்வாறு இரா.முத்தரசன் அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.
No comments:
Post a Comment