சென்னை,செப்.27- அதிமுக அலுவலகத்திலிருந்து காணாமல் போனதாக கூறப்பட்ட ஆவ ணங்கள் அனைத்தும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடமிருந்து மீட் கப்பட்டுள்ளதாக சிபிசிஅய்டி பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.
இரட்டை தலைமையின்கீழ் இயங்கிய அதிமுகவை ஒற்றை தலைமையின்கீழ் கொண்டு வருவ தற்காக கடந்த ஜூலை11ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் ராயப்பேட் டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் செல்ல ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவ ரது ஆதரவாளர்கள்முற்பட்ட னர். அவர்கள் அதிமுக அலுவ லகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம், கே.பழனி சாமி ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவர மானது. இதில், 47பேர் காய மடைந்தனர். வாகனங்கள் சேதப் படுத்தப்பட்டன. அதிமுக அலு வலகத்தில் இருந்த ஆவணங்கள் திருடு போயின.
அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல், ஆவ ணங்கள் எடுத்துச் செல்லப்பட் டது உள்பட 4 வழக்குகளை தனித்தனியாக ராயப்பேட்டை காவல்துறையினர் பதிவு செய் தனர். பின்னர் இந்த வழக்குகளின் விசாரணை அனைத்தும் சிபிசி அய்டி பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிபிசிஅய்டி காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக பழனிசாமியின் ஆதரவாளர்கள் 40 பேரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவா ளர்கள் 27 பேரும் நீதிமன்றத்தில் நிபந்தனை பிணை பெற்றனர். இதற்கிடையே அதிமுக அலுவ லகத்தில் இருந்த முக்கிய ஆவ ணங்கள் திருடப்பட்டதாக பழனிசாமி ஆதரவாளர் சி.வி.சண் முகம் எம்பி கொடுத்த புகாரின்பேரில் தொடர் விசாரணை நடத்தப் பட்டது.
இந்நிலையில், அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோத லின்போது காணாமல் போனதாக கூறப் பட்ட 113 ஆவணங்களும் மீட் கப்பட்டுள்ளதாக சிபிசிஅய்டி பிரிவு காவல்துறையினர் தெரிவித் துள்ளனர். மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யட்டுள் ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவரிடமிருந்து இந்த ஆவ ணங்கள் அனைத்தும் மீட்கப் பட்டுள்ளதாகவும் சிபிசிஅய்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment