பெரியார் மருந்தியல் கல்லூரியின் கலைஞர் கருணாநிதி நூலகம் நடத்திய “பெரியாரைத் துணைகொள்” கட்டுரைப் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

பெரியார் மருந்தியல் கல்லூரியின் கலைஞர் கருணாநிதி நூலகம் நடத்திய “பெரியாரைத் துணைகொள்” கட்டுரைப் போட்டி

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு பெரியார் மருந்தியல் கல்லூரியின் கலைஞர் கருணாநிதி நூலகம் “பெரியாரைத் துணைகொள்” என்ற தலைப்பில் மருந்தியல் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை பன்னாட்டு எழுத்தறிவு நாளான 08.09.2022 அன்று காலை 10 மணியளவில் நடத்தியது. இதில் 73 மாணவர்கள் பங்கு கொண்டு சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்களை இன்றும் என்றும் என்றென்றும் துணைகொள்ள வேண்டும் என்பதனை கட்டுரைகளாக எழுதினர்.  இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுத்தொகையும் புத்தகங்களும் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழாவில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment