டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
தெலுங்கானா முதலமைச்சர், டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் கே.சந்திரசேகர ராவ் துவக்க உள்ள அகில இந்திய கட்சிக்கு மதசார்பற்ற ஜனதா தள தலைவர் எச். டி.குமாரசாமி ஆதரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் மட்டுமே பெரிய கட்சி. 2024 பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் ஆகி யோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிறகு அவரைச் சந்திக்க உள்ளதாக ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி பேட்டி.
தி டெலிகிராப்:
சி.பி.அய்., அமலாக்கத்துறையை பயன்படுத்தி எங்கள் அரசை அச்சுறுத்த முடியாது. இது மகாராட்டிரா, மேற்கு வங்கம் அல்ல என பாஜகவுக்கு ஒடிசா மாநில பிஜூ ஜனதா தளம் எச்சரிக்கை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
உயர் ஜாதி நலிந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது இடஒதுக்கீட்டை கேலிக்கூத்தாக்கும் செயல் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு.
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment