இந்தியாவில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரித்து வருவதை, நாடு தன் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 2018 மற்றும் 2020 க்கு இடையில் 26 சதவீதம் அதிகரித்துள்ளன. அதே நேரத் தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் 17 சதவீதம் அதிகரித்துள்ளன என்ற புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி ஒன்றிய உள்துறை அமைச்சர் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரை யாற்றினார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, “தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 2018 இல் 6,528 ஆக இருந்து 2020 இல் 8,272 ஆக உயர்ந்துள்ளது. இது 26.71 சதவீதம் அதிகரித்து 8,272 ஆக உயர்ந்து உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங் கள், 42,793 லிருந்து 52,291 ஆக உயர்ந்து உள்ளது. இது மூன்று ஆண்டுகளில் 17.5 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று நாடாளு மன்றத்தில் தேசிய குற்றப் பதிவு பணியகம் (NCRB) சேகரித்த தரவு களை மேற்கோள் காட்டி தெரிவித்தார்.
“அமைச்சர் சமர்ப்பித்த அறிக்கை கவலையளிக்கிறது மற்றும் அச்சுறுத்துகிறது. உடனடியாக அரசு தலையிட்டு வன்முறை யாளர்களை கைது செய்ய வேண்டும். இம் மக்களின் சட்டம் பற்றிய அறியாமையை, வன்முறையாளர்கள் சாதகமாக பயன்படுத் திக் கொள்கிறார்கள். மேலும் பெரும்பா லான குற்றங்கள் காவல் துறையிடம் புகார் செய்யப்படுவதில்லை” என்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள் ஆணையத்தின் பழங்குடியினர் பிரிவிற்கான செயலாளர் தந்தை நிக்கோலஸ் பர்லா கூறினார்.
தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ ஆர்வலரும், ரமோன் மகசேசே விருதை வென்றவரு மான பெஸ் வாடா வில்சன். புது டில்லியில் அல்லது மாகாணங்களில், அரசாங்கம் எதுவாக இருந்தாலும், இந்நிலை மாறாது.” என்று கூறினார். புதுடில்லியில் உள்ள ஒரு வார இதழின் ஆசிரியர் முக்தி பிரகாஷ்டிர்கி, “மக்களுக்கு சட்டத்தின் மீது எந்த பயமும் இல்லை. தன்னை வலிமையானதாக காட் டிக்கொள்ளும் சமூகம் பலவீனமானவர்கள் மீதான வன்முறையை மாற்றாத வரை எதுவும் மாறாது” என்று கூறினார்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில், பல குற்றங்கள் குறைந்து போனாலும் பழங்குடி யினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்களின் அதிகரிப்பு தனித்து நிற்கிறது.
- நன்றி: “நம் வாழ்வு”, 21.8.2022
No comments:
Post a Comment