இவ்வார 'துக்ளக்'கில் (7.9.2022) ஈ.வெ.ரா. தன் எடைக்கு எடை வெங்காயம் வாங்கினார் - வெள்ளி வாங்கினார். ஆனால் தன் எடை அளவுக்கு மட்டுமே வாங்கினார். அது பழைய திராவிட மாடல் - தன் எடைக்கு மேல் அதிக பணம் வாங்கியது வீரமணி மாடல், புதிய திராவிட மாடல் என்று திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாளின் பூணூல் கிறுக்கியுள்ளது.
பெரியாருக்கு அவர் எடை அளவுக்குத்தான் கொடுத்தார்கள். அவரின் சீடரான வீரமணிக்கோ எடைக்கு அதிகமாகக் கொடுக்கிறார்கள் என்கிறபோது அக்கிரகாரத்தின் அடி வயிற்றைக் கலக்காதா? பழனியில் பார்ப்பனர் மாநாடு நடத்தி வீரமணியைப் பாடை கட்டி தூக்கியவர்கள் ஆயிற்றே!
பெரியாரோடு திராவிடம் ஓய்ந்து விடும் என்று மனப்பால் 'குடித்து'க் கிடந்தவர்கள் வீரமணி காலத்தில் வீறு கொண்டு எழுந்து விட்டனரே இளைஞர்கள் என்கிறபோது இரத்தம் கொதிக்காதா? இந்தக் கும்பலுக்கு - திராவிட மாடல் ஆட்சி என்கிறபோது ஈரக்குலை நடுங்காதா?
எடைக்கு மேல் ரூபாய் நோட்டைப் பெற்றது வீரமணி தனக்காக அல்ல; தன் வீட்டுக்காக அல்ல! ஆரியத் திமிர் ஆதிக்கக் கோட்டையைத் தகர்க்கும் 'விடுதலை' ஏட்டுக்கான சந்தா என்னும் பீரங்கிக்காக! விடுதலை என்ன செய்யும் என்பது. அவாளுக்கு நன்றாகவே புரியும் - இந்தப் பின்னணி எல்லாம்! அதற்காகத்தான் தான் ஆரியம் அலறுகிறது! அலறோ அலறு என்று அலறுகிறது! புரிந்து கொள்வீர்!
No comments:
Post a Comment