சென்னை,செப்.20- மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் அனுமதி இன்றி கூட்டம் நடத்திய விவகாரம் தொடர்பாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்பட 75 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் கடந்த மாதம் 31-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மற்றும் 25 பெண்கள் உள்பட 75 பேர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கபாலீசுவரர் கோயில் நிர்வாகத்தை பக்தர்களே ஏற்று நடத்தவேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. உரிய அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் எனஇந்து சமய அறநிலையத் துறை சார்பில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டனர். இதில்,அனுமதி இன்றி கூட்டம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்பட 75 பேர்மீது 3 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். உமாஆனந்தன் உள்ளிட் டோரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மயிலாப்பூர் காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பியுள்ளனர். அழைப்பாணையை ஏற்றுசென்னை உயர் நீதிமன்ற வழக் குரைஞர் உள்ளிட்ட இருவர் நேற்று (19.9.2022) மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள் ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
No comments:
Post a Comment