சென்னை, செப்.23 மாணவ -சமுதாயத்தினரிடையே திருக்குறளின் கருத்துகளைப் பரப்பவும், தமிழாற்றலை வளர்க்கவும், வரையும் திறனை ஊக்குவிக்கவும் சிறீராம் இலக்கியக் கழகம் மாநில அளவில் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கிடையேயான திருக்குறள் பேச்சு மற்றும் ஒவியப் போட்டியை நடத்துகிறது.
அக்டோபர் 15 முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரிடையே நடைபெற இருக்கும் இப்போட்டியில் பங்கு பெற விரும்புவோர் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை எண் 145 சாந்தோம் நெடுஞ்சாலை, மயிலாபூர், சென்னை - 600 004 தொலைபேசிஎண் 44-4021-4100 என்ற முகவரியிலோ பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.shirram.chits.com என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி அக்டோபர் 10 ஆகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment