மதுரை புறநகர் மாவட்டம், மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா மறைவை ஒட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்கள் எழுதிய இரங்கல் செய்தியினை, சேடபட்டி முத்தையாஅவர்களின் மகன்
மு.மணிமாறனிடம் அளித்து - மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர் சி.பாண்டியன், மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் பா.முத்துக் கருப்பன், திருமங்கலம் நகர தலைவர் மு.சண்முகசந்தரம், மகளிர் பாசறை தலைவர் இரா.கலைச்செல்வி, மகளிரணி செயலாளர் சு.பஞ்சவர்ணம் ஆகியோர் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.
'பெரியார் ஒரு மனித அதிசயம்'
யூ-டியூப், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகுத்தறிவு, சுயமரியாதை, இனமான உணர்வுள்ள பதிவுகளை தம் குரலில் பதிவிட்டு வரும் தோழர் சீ.அகிலா, தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் பதிவாக கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தமிழாற்றுப் படையில் தந்தை பெரியார் குறித்து வெளியிட்ட Ôபெரியார் ஒரு மனித அதிசயம்Õ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment