தென் மாவட்டங்களில் முதலமைச்சர் பயணத் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 10, 2022

தென் மாவட்டங்களில் முதலமைச்சர் பயணத் திட்டம்

சென்னை, செப்.10 திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு 14, 15, 16-ஆம் தேதிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணம் மேற்கொள் கிறார்.

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களாக கன்னியாகுமரி, நெல்லை, மதுரை மாவட்டங்களுக்கு சென்று அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சென்னை திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் அவர் தென் மாவட்டங்களுக்கு செல்கிறார். அவரது பயணத் திட்டங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி 14-ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்துக்கு செல் கிறார். அங்கு தோட்டனூத்து என்ற இடத்தில் இலங்கைத் தமிழர் களின் மறுவாழ்வுக்காக 321 வீடுகளை பய னாளிகளுக்கு வழங்குகிறார். ரூ.17.17 கோடி செலவில் இந்த வீடுகள் கட்டப் பட்டுள்ளன. 

பின்னர் அவர் மதுரைக்கு செல்கிறார். 15-ஆம் தேதி காலையில் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி மதுரை நெல்பேட்டை என்ற இடத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அவர் மலர் மாலை அணிவித்து மரியாதை செய் கிறார். பின்னர் அங்குள்ள அரசு பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து விருதுநகருக்கு செல்லும் அவர் ரூ.70 கோடி செலவில் உருவாக இருக்கும் மாவட்ட ஆட்சியர்  அலு வலக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். 

பின்னர் விருதுநகர் அருகே நடைபெறும் தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து 16-ஆம் தேதி மதுரைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று, அங்கு தொழில் முனைவோர் கூட்டத்தில் அவர் களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் அன்றே சென்னைக்கு புறப்படுகிறார்.


No comments:

Post a Comment